/* */

உள் விளையாட்டரங்க விவகாரத்தில் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயநிதி

புதுக்கோட்டையில் பல நலத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒருசில திட்டங்களில் தொய்வுகள் இருக்கின்றன.

HIGHLIGHTS

உள் விளையாட்டரங்க விவகாரத்தில்  அறிக்கை கேட்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயநிதி
X

பைல் படம்

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ள புதுக்கோட்டை உள்விளையாட்டரங்கப் பணிகள் தொடர்பாக ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப் பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

உள்விளையாட்டரங்கப் பணிகள் முடிக்கப்படாமல் நின்று போனது குறித்து ஆட்சியரிடம் விளக்க அறிக்கை கேட்டுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு, நின்று போயிருக்கும் உள்விளையாட்டரங்கம் கட்டும் பணி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளேன் என்றார் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி: பல்வேறு மாவட்டங்களுக்கு முதல்வரின் உத்தரவின்பேரில் அமைச்சர்கள், ஆட்சியர்கள் முன்னிலையில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறேன். அதுகுறித்த அறிக்கையை முதல்வரிடம் விரைவில் அளிப்பேன்.

புதுக்கோட்டையில் பல நலத் திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டுள்ளன. ஒருசில திட்டங்களில் தொய்வுகள் இருக்கின்றன. அவற்றை சரி செய்ய அமைச்சர்கள், ஆட்சியரிடம் அறிவுறுத்தியிருக்கிறேன். முதல்வரிடமும் விவரங்களைத் தெரிவிப்பேன்.

ஜல்லிக்கட்டு போட்டி, கலாசாரப் பட்டியலில் இருப்பதை விளையாட்டுப் பட்டியலுக்கு மாற்றுவது தொடர்பாக முதல்வரிடம் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் சிலம்பாட்ட வீரர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் உள்விளை யாட்டு அரங்கம் அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டத் தொடங்கப் பட்டு முழுமை பெறாமல் இருப்பது குறித்து விரிவான அறிக்கை ஆட்சியரிடம் கேட்டுள்ளேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Updated On: 26 May 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?