/* */

அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில மாநாடு ஆக.27, 28 -ல் புதுக்கோட்டையில் நடக்கிறது

State Conference of Anganwadi Workers Union in Pudukottai August 27 and 28

HIGHLIGHTS

அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில மாநாடு  ஆக.27, 28 -ல் புதுக்கோட்டையில் நடக்கிறது
X

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டத்தில் பேசிய சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு உடன் எம்எல்ஏ சின்னதுரை.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 6-ஆவது மாநில மாநாடு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 27, 28 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டம் புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் டி.பத்மா, பி.சந்திரா, கே.எம்.ரேவதி, எம்.விஜயலெட்சுமி, ஏ.சி.செல்வி, எம்.முத்துலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் வரவேற்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் தொடக்கவுரையாற்றினர். கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிப்பாபு, மாநில செயலாளர் கோபிக்குமார், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில தலைவர் எஸ்.ரெத்தினமாலா, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சி.அன்புமணவாளன், அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க மண்டல பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன் உள்ளிட்டோர் பேசினர்.

மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவராக எம்.சின்னதுரை எம்எல்ஏ, செயலாளராக சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொருளாளராக அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில பொருளாளர் எஸ்.தேவமணி உள்ளிட்ட 34 பேர் கொண்ட வரவேற்புக்குழுவும், உப குழுக்களும் அமைக்கப்பட்டன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி-பொதுக்கூட்டத்துடன் 450-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாடும் நடைபெறும் எனவும், சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.ஆர்.சிந்து உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடியில் மாநில பொருளாளர்ள எஸ்.தேவமணி நன்றி கூறினார்.


Updated On: 2 July 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  2. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  3. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  4. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  7. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  8. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  9. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்