/* */

இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் மாநில விருது

ஊக்கத்தொகையாக முதலாம் பரிசுரூ.1,00,000-ம், இரண்டாம் பரிசு ரூ.60,000-ம், மூன்றாம் பரிசு ரூ.40,000-ம் வழங்கப்பட இருக்கிறது

HIGHLIGHTS

இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் மாநில விருது
X

பைல் படம்

இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் மாநில விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பாக 2022-23 ஆம் ஆண்டிற்கான இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து சான்றிதழுடன் ஊக்கத்தொகையாக முதலாம் பரிசுரூ.1,00,000-ம், இரண்டாம் பரிசு ரூ.60,000-ம், மூன்றாம் பரிசு ரூ.40,000-ம் வழங்கப்பட இருக்கிறது.

இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிரிடப்படும் தோட்டக்கலை பயிர்களுக்கு அங்கக இடுபொருட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்றும் இயற்கை முறையில் தோட்டக்கலைபயிர்கள் சாகுபடி செய்வதற்கான அங்கக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தினை விவசாயிகள் உழவன் செயலி (ulavanapp) மூலம் பதிவேற்றம் செய்து, சிறந்த விவசாயிகளுக்கான விருது பெற விண்ணப்பிக்க ரூ.100- கட்டணமாக அந்தந்த வட்டாரங்களில் செலுத்த வேண்டும். மேலும், உழவன் செயலியில் 21.11.2022 முதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார அலுவலர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி... பழவகைகள், காய் கறிபயிர்கள் வணிக மற்றும் மலர்கள், நறுமணப் பயிர்கள், மலைத் தோட்டப் பயிர்கள், மூலிகைப் பயிர்கள் ஆகியன தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் பயிரிடப்படுகின்றன. இவை 8.24 இலடசம் எக் டர், பரப்பளவில் சாகுபடிசெய்யப்பட் டு 99.47 இலட் சம் மட்ரிக் டன்கள் உற்பத்தியாகின்றன.

இவற்றில் 2.21 லட்சம் எக்டரில் பழப்பயிர்களும, 1.91 லட் சம் எக் டரில் காய் கறிகளும், 0.20 ; இலடசம் எக் டரில் மலர்களும, 1.54 இலட் சம் எக் டரில்; நறுமணப்பயிர்களும , 2.34 இலட் சம் எக்டரில் மலைத் தோட் டப் பயிர்களும், 0.04 இலட்சம் எக்டர் பரப்பளவில் மூலிகைப் பயிர்களும் பயிரிடப்பட் டுள்ளன. தமிழ்நாடு மலைப்பயிர்கள் உற்பத்தியில் அகில இந்திய அளவில முதலிடம் வகிக்கின் றது. உற்பத் தித் திறனைப் பொறுத்தவரை வரை காய்கறிப் பயிர் களில் முதலிடமும் மலை பயிர்களில் 2 வது இடமும் வகிக்கின்றது.

தமிழகத்தில் உற்பத்தி தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கிறது. இந்த உற்பத்தியானது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள பல்வேறு உயர் தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து சாகுபடி செய்ததால் இது சாத்தியமானது. உயர் விளைச்சல் இரகங்கள், விதையில்லா இனப்பெருக்கம், ஒட்டுமுறை இனப்பெருக்கம் அடர் நடவு முறைகள் பருவ மழைக் காலங்களில் காய்ப்பதற்கான தொழில் நுட்பம் சொட்டு மற்றும் நீர்வழி உரமிடுதல், துல்லிய பண்ணைத் திட்டம் ஆகிய உயர் தொழில் நுட்பங்களாகும்.

மேலும் உயரிய தோட்டக்கலை தொழில் நுட்பத்தில் நீர் மேலாண்மை, பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறை, உர நிர்வாகம், பயிர் பாதுகாப்பு அறுவடைக்கு பிந்தைய தொழில், வளரும் வேளாண்மை ஆகிய தொழில் நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற் றில் உர நிர்வாகம் மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் ஏற்கெனவெ அறிந்து பின்பற்றி வருகின்றனர். இவற்றில் நீர் மேலாண்மை, பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறை அறுவடைக்கு பிந்தைய தொழில் நுட்பம் அறிந்து கொள்ள வேண்டும். சொட்டு நீர்ப்பாசன முறை மேற்கொள்ளவது சிறந்ததாகும். இதனால் நீரின் தேவை 70 சதவீதம் குறைகிறது. இந்த முறையில் சிக்கனமாக நீரைப் பயன் படுத்தி அதிக பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம் என தோட்டக்கலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Updated On: 8 Dec 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...