/* */

புதுக்கோட்டையில் புகையிலைபொருட்களை பறிமுதல் செய்த போலீசாருக்கு பாராட்டு விழா

புதுக்கோட்டையில் 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்களை பறிமுதல் செய்த போலீசாருக்கு எஸ்பி அலுவலகத்தில் பாராட்டு விழா

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் புகையிலைபொருட்களை  பறிமுதல் செய்த போலீசாருக்கு பாராட்டு விழா
X

நகர காவல் ஆய்வாளர் குரு நாதனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, பொருட்களை வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா ,போன்ற பொருட்களை விற்பனை செய்கிறார்களா என்பது குறித்து காவல்துறையினர் சோதனைகள் நடத்த வேண்டும் என காதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் தொடர்ந்து 2 நாட்களாக புதுக்கோட்டை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த சோதனையில் புதுக்கோட்டை அண்டக்குளம் அருகே கோவிந்தராஜ் என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா உள்ளிட்டவைகளை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் குருநாதன் தலைமையில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கோவிந்தராஜ் வீட்டிலிருந்து சுமார் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் மதிப்புள்ள 500 கிலோ குட்கா, ஹான்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு நான்கு சக்கர வாகனமும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

அதேபோல் புதுக்கோட்டை மச்சுவாடி ஜீவா நகர் பகுதியில் துரைராஜ் என்ற என்பவர் வீட்டில் ஹான்ஸ், குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக வந்த தகவலின் அடிப்படையில் அவருடைய வீட்டிலும் சோதனை செய்தபோது 200 கிலோ குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதனுடைய மதிப்பு 60 ஆயிரம் ரூபாய் என மொத்தம் புதுக்கோட்டையில் 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா போதைப்பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றினார்.

மேலும் தடைசெய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்களை விற்பனை செய்த இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து 2 நாட்களாக புதுக்கோட்டையில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட நகர காவல் ஆய்வாளர் குருநாதன் உள்ளிட்ட காவலர்களுக்கு இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கலந்துகொண்டு காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Updated On: 24 July 2021 11:20 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  2. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  3. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்
  6. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்