/* */

சாந்தநாதசுவாமி கோவிலில் சோலார் மின்சாரம்: அமைச்சர் தொடக்கம்

கோவிலில் சோலார் பிளாண்ட் போட்டது மூலமாக கோவிலுக்கு மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் மீதமாகும்

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் புகழ் பெற்ற சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் சூரியசக்தி மூலமாக மின்சாரம் வழங்கும் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோயில் மிகவும் சிறப்பு பெற்றதாகும்.இக்கோயிலில் மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின்சார கட்டணமாக செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் முழுவதுமாக இந்த கோயிலில் சோலார் பிளான்ட் மூலமாக விளக்குகள் எரிவதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.



இந்த முடிவை ஏற்று உபயதாரர்கள் மூலமாக ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 2 கிலோ வாட் 2 சோலார் பிளான்ட் கள் கோவிலின் மேல் தளத்தில் போடப்பட்டது. இந்த சோலார் பிளான்ட் மூலமாக 60 விளக்குகள் எரிய வைக்க முடியும். இந்த சோலார் மூலமாக கோவிலுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடக்கி வைத்தார். கோவிலில் சோலார் பிளாண்ட் போட்டது மூலமாக கோவிலுக்கு மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 Sep 2021 6:57 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்