/* */

மழைநீர் கால்வாய்களில் கழிவு நீர் தேக்கம்: பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் கால்வாயில் கழிவு நீர் தேங்கியுள்ளதைக் கண்டித்து மறியல்

HIGHLIGHTS

மழைநீர் கால்வாய்களில் கழிவு நீர் தேக்கம்: பொதுமக்கள் சாலை மறியல்
X

திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் கால்வாயில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும், கொசுக்கள் உற்பத்தியாவதாகவும் கூறி நூற்றுக் கணக்கான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் கால்வாயில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும், கொசுக்கள் உற்பத்தியாவதாகவும் கூறி நூற்றுக் கணக்கான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த மழைநீர் கால்வாய் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வருகிறது. திருவொற்றியூர் மண்டலத்திலும் ஐந்து பகுதிகளாக பிரித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவொற்றியூர் நெடுஞ்சாலையை ஒட்டி கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கால்வாய் நெடுகிலும் கழிவு நீர் இணைப்புகளும் செல்கின்றனர். இக்குழாய்களை அகற்றிவிட்டுதான் கால்வாயை அமைக்க வேண்டியதுள்ளதாக

அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவைகளையும் மாற்ற வேண்டியதுள்ளது. இதனால் பல இடங்களில் பணியை பாதியில் நிறுத்திவிட்டு இணைப்பு செய்யாமல் அடுத்த இடத்தில் வேலைக்கு செல்கின்றனர். இதனால் தொடர்ந்து அவ்வப்போது பெய்து வரும் மழையால் பெருகும் மழைநீர் ஆங்காங்கு இணைக்கப்படாமல் அமைக்கப்பட்டுள்ள கால்வாய்களில் தேங்கி நிற்கிறது. இதில் சில இடங்களில் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதால் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருவதாகக் கூறி இப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தேங்கி இருக்கும் மழைநீரை உடனடியாக அகற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை யடுத்து சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 3 Aug 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  3. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  4. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  5. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  7. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  8. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  9. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  10. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...