/* */

ஆஞ்சநேயர் திருக்கோயிலில் சனிப் பெயர்ச்சி பரிஹார ஹோமம்

சனிபகவான் கெடுபலன்களைத் தரும் கிரகம் அல்ல. அவர் தர்மவான். நம் செயல்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்பப் பலன்களை வழங்குபவர்

HIGHLIGHTS

ஆஞ்சநேயர் திருக்கோயிலில் சனிப் பெயர்ச்சி பரிஹார ஹோமம்
X

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சனிப் பெயர்ச்சி பரிஹார ஹோமம்

புதுக்கோட்டை தெற்கு 3, 4 -ஆம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் சனி பெயர்ச்சி பரிஹார ஹோமம் 29.03.23 அன்று நடைபெற்றது.

இதையொட்டி ஆலயத்தில் கே.மணி குருக்கள் தலைமையில் நடைபெற்ற பரிகார ஹோம வைபவத்தில், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கிரகங்களின் மூலமந்திர ஹோமம், ம்ருத்யுஞ் ஜய ஹோமம், சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம் பூரணஹூதியும் நடந்தது.பின்னர் சனிபகவானுக்கு கலச அபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்றது ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ,ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை சிறப்பு வழிபாடு நடந்தது.

பக்தர்களுக்கு சனிப் பெயர்ச்சி பற்றி கே.மணி குருக்கள் கூறியதாவது: நவகிரகங்களில் சனி பகவானை ஆண்டு கிரகம் என்போம். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆவார் சனிபகவான். ஒருவர் வாழ்வில் முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்களின் சொந்த ராசியில் சனிபகவான் சஞ்சரிப்பார். இதை அடிப்படையாக வைத்தே முப்பது ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை முப்பது ஆண்டுகள் வீழ்ந்தவரும் இல்லை என்னும் பழமொழி உருவானது.

சனிபகவான் கெடுபலன்களைத் தரும் கிரகம் அல்ல. அவர் தர்மவான். நம் செயல்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்பப் பலன்களை வழங்குபவர்.வாழ்க்கையின் எந்தவிதமான பிரச்னையையும் எதிர்கொள்வதற்குரிய துணிச்சலையும், இயல்பாகக் கையாள்வதற்குரிய அனுபவத்தையும் சனி பகவான் ஒருவரின் ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் தருவார். எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு மனிதனைக் கீழ்நிலைக்கு போகச் செய்யமாட்டார் என்றார் அவர்.

நிகழ்வில், புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தி. அனிதா, தேவஸ்தான நிர்வாகிகள், ஆன்மிக ஆர்வலர் மூத்த மருத்துவர் எஸ். ராம்தாஸ், கவிஞர்நிலவை பழனியப்பன், அனுமன் திருச்சபையினர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபையினர், ஆன்மிகநெறியாளர் ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்

Updated On: 29 March 2023 10:30 AM GMT

Related News