புதுக்கோட்டையில் நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை தொடங்கியது

நவராத்திரி விழா வருகிற 26- ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
புதுக்கோட்டையில் நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை தொடங்கியது
X

புதுக்கோட்டை.யில் நவராத்திக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பல விதமான கொலு பொம்மைகள்

புதுக்கோட்டையில் நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை தொடங்கியது.

வருகிற 26- ஆம் தேதி முதல் வீடுகளில், கோவில்களில் நடைபெறுந் நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்படும்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நவராத்திரி விழாவையொட்டி இந்துக்கள் தங்கள் வீட்டில் 9 நாட்களும் கொலு பொம்மைகளை வைத்து அலங்கரித்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டதால், இந்த ஆண்டு நவராத்திரி விழா கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கி உள்ளது. கொலு பொம்மை விற்பனை விழாவையொட்டி புதுக்கோட்டை சாந்தநாதர் சந்நிதி அருகிலுள்ள ஜி.டி.என். பூஜை பொருட்கள் ஸ்டோரில் நவராத்திரி கொலு பல வண்ணங்களில் சிறியது முதல் பெரியது வரை கொழு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இது குறித்து, வியாபாரி சேகர் கூறுகையில், விற்பனைக்காக பொம்மைகள் மதுரை சென்னை,பெங்களூர் கொல்கத்தா உள்ளிட்ட ஊர்களிலிருந்து விதவிதமான கொலு பொம்மைகள் வந்துள்ளன. இந்த விற்பனையும் சூடுபிடித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் கொலு பொம்மை விற்பனை நடக்கிறது. இங்கு ரூ.100 முதல் ஆயிரம் வரை கொலு பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது.

மக்களும் ஆர்வமுடன் வீடுகளில் கொலு வைப்பதற்காக பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர். கடைகளில், மீனாட்சி சுந்தரேசுவரர், சக்கரத்தாழ்வார், தெட்சிணாமூர்த்தி, அன்னபூரணி, சிவன், வராகி அம்மன், கற்பக விநாயகர், ராஜகணபதி, முருகன், சரஸ்வதி, பெருமாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு கடவுள் பொம்மைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்காக உள்ளன.

மேலும் ராமர், சீதை, வயதான தாத்தா, பாட்டி பொம்மைகள், மீனாட்சி திருக்கல்யாணம், சீனிவாசர் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், சரவண பொய்கை, சிவபெருமான் புட்டுக்கு மண்சுமந்த கதையை விளக்கும் பொம்மை செட், விவசாயத்தை பிரதிபலிக்கும் பொம்மை செட்டுகள் இந்த ஆண்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று திருவள்ளுவர், அப்துல்கலாம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி, விவேகானந்தர் போன்ற தலைவர்களின் உருவ பொம்மைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த பொம்மைகள் அனைத்தும் களிமண் மற்றும் காகித கூழ் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர் என்கிறார் விற்பனையாளர் சேகர்.

Updated On: 22 Sep 2022 12:15 PM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...