/* */

பொன்னமராவதி பேரூராட்சியில் சாலை- வடிகால் அமைக்கும் பணி: அமைச்சர் தொடக்கம்

பொன்னமராவதி பேரூராட்சியில்  சாலை- வடிகால் அமைக்கும் பணி: அமைச்சர் தொடக்கம்
X

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சியில் உள்ள அம்மன் கோவில் வீதியில் பேவர் பிளாக் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்

பொன்னமராவதி தேர்வு நிலை பேரூராட்சியில் பேவர் பிளாக் சாலை மற்றும் வடிகால் அமைப்பதற்கான பூமி பூஜையை அமைச்சர் துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தேர்வு நிலை பேரூராட்சி அம்மன் கோயில் வீதியில் ரூ 65 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தலைமை வகித்தார்.

பூமி பூஜையை துவக்கிவைத்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: தமிழக முதல்வர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சி அம்மன் கோயில் வீதியில் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ 65 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி, முத்து, செயல் அலுவலர் கணேசன் வீடுகட்டும் கூட்டுறவு சங்க இயக்குனர் அழகப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Jan 2022 11:30 AM GMT

Related News