/* */

ஊழியர் பற்றாக்குறையால் திணறி வரும் புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்கள்

Devasthanam Temple - தமிழகத்தில் இருக்கும் தேவஸ்தான கோயில்களில் அதிகமாக புதுக்கோட்டை தேவஸ்தானத்தில் 228 க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன

HIGHLIGHTS

ஊழியர் பற்றாக்குறையால் திணறி வரும் புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்கள்
X

பைல் படம்

Devasthanam Temple - புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களை நிர்வகிக்க போதிய ஊழியர்கள் இல்லாமல் இந்து சமய அறநிலையத் துறை திணறும் அவலநிலை மாறுமா என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மன்னர்களிடமிருந்து பெறப்பட்ட தேவஸ்தான கோயில்கள் தேவசம் போர்டு என்ற நிர்வாகத்தில் வருகின்றன. இதில் KDB -கன்னியாகுமரி தேவஸ்தானத்தில் சுமார் 25 கோயில்களும், தஞ்சாவூர் (AC) தேவஸ்தானத்தில் சுமார் 63 கோயில்களும், புதுக்கோட்டை தேவஸ்தானத்தில் சுமார் 228 கோயில்கள் உள்ளன. அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் நியமிக்கப்படுகின்ற செயல் அலுவலர், இணை ஆணையர், துணை ஆணையர்ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் சமஸ்தான கோயிகள் இதுவரை மன்னர்களின் வாரிசுதாரர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதில், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் சமஸ்தான கோயில்களை குறிப்பிடலாம்.

காஞ்சி என்றால் காமாட்சி, மதுரை என்றால் மீனாட்சி, காசி என்றால் விசாலாட்சி, புதுக்கோட்டை என்றார் அருள்மிகு பிரஹதாம்பாள் கோயில் என்பவை தனி அடையாளமாக ஆன்மீக அன்பர்களால் பார்க்கப்படுகிறது.இந்நிலையில், தமிழகத்தில் இருக்கும் தேவஸ்தான கோயில்களில் அதிகமாக புதுக்கோட்டை தேவஸ்தானத்தில் 228 க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.

அதில், நார்த்தாமலை, திருவப்பூர், விராலிமலை, பேரையூர், பெருங்களுர், குடுமியான் மலை, திருமயம் மற்றும் கரூர் மாவட்டம் நெருர் என பிரசித்திப் பெற்ற கோயில்கள் இதன் கீழ் உள்ளன. 36 கோயில்களில் தேர்கள் இருக்கின்றன. கோயில்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான நிலங்களும், விலைமதிப்பு மிக்க நகைகளும் உள்ளன. இவை அந்தந்த பகுதியில் உள்ள சார்நிலை கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கோயில்களை கவனிப்பதற்கு நிலை 1 செயல் அலுவலரின் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. ஆனால் உதவியாக 16 சூபர்வைசர்கள் இருந்தனர். 16 பேர்களில் ஒவ்வொருவராக ஓய்வு மறறும் இறப்பு காரணமாக குறைந்து தற்போது 2 பேர் மட்டுமே 200 க்கும் மேற்பட்ட கோயில்களை அலுவலக பணிகளுடன் சேர்த்து செய்து வருகின்றனர்.

ஒரு குடமுழுக்கு, ஒரு தேர் உற்சவம் நடத்துவதே எவ்வளவு சிரமம் எனும் நிலையில் ஒரே நாளில் 2 அல்லது 3 குடமுழுக்கு , 2 அல்லது 3 தேர் உற்சவங்கள், சமயத்தில் 4 தேர் உற்சவம் நடைபெறுவதும் உண்டு. இதற்கு நடுவே அதிகாரிகளின் சிறப்பு பணிகள் வேறு. 10 -க்கும் மேற்பட்ட கோயில்களில் அன்னதான திட்டமும் உள்ளது.இந்த சூபர்வைசர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் மேற்படி பணிகள் மட்டுமின்றி கண்காணிப்பு வேலைகள், பராமரிப்பு வேலைகள் , கோயில் சீரமைப்பு போன்ற பணிகள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர் பற்றாக்குறையால் கோயிலை நிர்வாகம் செய்வதும் செயல் அலுவலருக்கு மாபெரும் சுமையாக உள்ளது.

பணியிடங்களை நிரப்ப உத்தரவு கோரி விண்ணப்பம் அனுப்பினால் திருச்சி இணை ஆணையர் (JC) அலுவல ஆபிஸில் இருந்து சென்னை ஆணையர் அலுவலகத்துக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்படும். ஆனால் சென்னை ஆணையர் அலுவலத்தில் கிடப்பில் போடப்படும் அவலம் நீடிக்கிறது.

தமிழகத்திலேயே பெரும் அளவில் நில மோசடிகள் , நில அபகரிப்புகளில் தேவஸ்தானதுக்கு சொந்தமான சொத்துகள் பலரால் அபகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக DRO, RDO விசாரணையிலும் உள்ளன. பெரும் இழப்புகளை தேவஸ்தான கோயில்கள் சந்திக்கும் சூழலில் சூபர்வைசர் மற்றும் கோயில் பணியாளர் பதவிகளை நிரப்புவதற்க்கு அறநிலையத்துறை முன்னுரிமை அளிக்க வேண்டும். பணி பளு மிக்க புதுக் கோட்டை தேவஸ்தானத்தின் அலுவலகத்திலும் காலியிடங் களை பூர்த்தி செய்வதன் மூலமே பிரச்னையை சரி செய்ய இயலும்.

அமைச்சர், அரசுச்செயலர் ஆணையரும் ஆகியோர் தனிக் கவனம் செலுத்தி ஒரு குழு அமைத்து கோயில்களை ஆய்வு செய்து கோயில்களுக்குத் தேவையான பணியிடத் தொகுதி அமைத்து, அமைச்சுப்பணியாளர்கள், நிலை 3, நிலை 4 செயல் அலுவலர்களை நியமிக்க வேண்டும். திருப்பணி, குடமுழுக்கு, கோயில் நிலங்களை பாதுகாப்பது டன் பக்தர்களுக்கான அத்தியாவசிய வசதிகளை விரைந்து நிறைவேற்ற முடியும். எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேவஸ்தான கோயில்களையும் அவற்றுக்குச் சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலங்களை பாதுக்காக தமிழக அரசு முன் வரவேண்டும் என்பதே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 17 Aug 2022 4:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...