/* */

விஸ்வரூபம் எடுத்துள்ள புதுக்கோட்டை நகரின் அரசு உயர் துவக்கப்பள்ளி விவகாரம்

மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா, நகர காவல்துணை கண்காணிப்பாளர் ராகவி, ஆய்வாளர் குருநாதன், வட்டாட்சியர் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு நடத்தினர்

HIGHLIGHTS

விஸ்வரூபம் எடுத்துள்ள புதுக்கோட்டை நகரின் அரசு உயர் துவக்கப்பள்ளி விவகாரம்
X

புதுக்கோட்டை அரசு  உயர்துவக்கப்பள்ளிக்கு கட்டிட வசதி கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

பள்ளி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பெற்றோரால் புதன்கிழமை நடத்தப்பட்ட சாலை மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை நகரிலுள்ள அரசு உயர்துவக்கப்பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் டவுன் ஹால் அருகே கடந்த 18.7.1958 -ல் இப்பள்ளி தொடங்கப்பட்டது.புதுக்கோட்டை கல்வி மாவட்டம், புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு முதல் 64 ஆண்டுகளாகப் பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் புதுகையின் ஒரே அரசு நடுநிலைப்பள்ளி ஆகும்.1 முதல் 8 வகுப்புகள் நடைபெறுகின்ற. இங்கு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகிறது.

நடப்பு 2022-2023 ஆம் கல்வியாண்டில் 1-5 வகுப்புகளில் (257ஆண்கள்+231பெண்கள் உள்பட மொத்தம் 488 பேரும்.6 முதல் 8 வகுப்புகளில் (182ஆண்கள்+114 பெண்கள் உள்பட மொத்தம் 296 பேர் உள்பட மொத்தம் ( 439 ஆண்கள்+ 345 பெண்கள் உள்பட 784 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளில் 2016-2017 = 122. 2017-2018 = 128.2018-2019 = 201. 2019-2020 = 339. 2020-2021 = 516. 2021-2022 = 844. (நடப்பு 2022-2023 ஆம் கல்வியாண்டில் 784 மாணவர்கள் என சேர்க்கை விகிதம் வளர்ச்சிப்போக்கில் உள்ளது.

மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் பள்ளிக்கல்விக்குழு பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் இங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன் கூடி பங்களிப்புதான் என்றால் மிகையாகாது.நடப்பு 2022-2023 ஆம் கல்வியாண்டில் 132 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.

பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணியாற்றும் ஆசிரியர்கள்:தலைமையாசிரியர் – 1 .பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) – 1 .பட்டதாரி ஆசிரியர்(ஆங்கிலம்) – 2 .பட்டதாரி ஆசிரியர்(கணிதம்) – 1 .பட்டதாரி ஆசிரியர்(அறிவியல்) – 1.இடைநிலை ஆசிரியர் – 3 .மொத்தம் – 9 பேர் (காலிப்பணியிடம் இல்லை).அலுவலகப் பணியாளர்கள் பிரிவில் ஒரு துப்புரவு பணியாளர் தவிர வேறெந்த அலுவலகப்பணியாளர் பணியிடங்களும் இதுநாள் வரை பள்ளிக்கு வழங்கப்படவில்லை.

பெற்றோர் மாணவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகள்: இந்நிலையில்,பள்ளிக்கு கூடுதலாகத் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் கடந்த 2 ஆண்டுகளாக சுணக்கம் நீடித்து வருகிறது. இடைநிலை ஆசிரியர் – 14.பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) – 1 .பட்டதாரி ஆசிரியர்(கணிதம்) – 1 .பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) – 2 .பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) – 2 .உடற்கல்வி ஆசிரியர் – 1.ஓவிய ஆசிரியர் – 1 .தையல் ஆசிரியர் – 1.இசை ஆசிரியர் – 1 .மொத்தம் – 24 ஆசிரியர் பணியிடங்கள் தேவையிருக்கிறது. அத்துடன் பள்ளிக்கு கூடுதலாகத் தேவைப்படும் அலுவலகப் பணியாளர் பணியிடங்களில் இளநிலை உதவியாளர் – 1. அலுவலக உதவியாளர் – 1.இரவுக்காவலர் – 1 .மொத்தம் – 3 பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

பள்ளியில் பயன்பாட்டில் இருக்கும் வகுப்பறைகள் எண்ணிக்கை: 8. பள்ளிக்கு கூடுதலாகத் தேவைப்படும் வகுப்பறைகள் எண்ணிக்கை: 20 .மேலும், கூடுதலாக கழிப்பறை வசதி, சிறுநீர் கழிப்பிட வசதி மற்றும் பள்ளிக்கென தனி விளையாட்டு மைதானம் ஆகியன தேவைப்படுகிறது.

ரெத்தினம் (தற்போதைய பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்), பள்ளியின் கிராம கல்விக்குழு (SMC) தற்போதைய தலைவர் சேட் (எ) அப்துல் ரஹ்மான்,பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தற்போதைய தலைவர் மாரிக்கண்ணு, உறுப்பினராக நகராட்சி 9 வது வார்டு உறுப்பினர் செந்தாமரை பாலு உள்ளிட்டோர் இருக்கின்றனர்

வகுப்பறை பற்றாக்குறை காரணமாக அருகாமையில் உள்ள நகர்மன்றக் கட்டிடத்தில் (Town Hall)6, 7, 8 வகுப்புகளுக்கு தற்காலிக வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.மேலும், பள்ளி வளாகத்தில் இருந்த பழைய மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம் அகற்றப்பட்டதன் காரணமாக 3/4 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் பள்ளிக்கு கிடைத்துள்ளது. அந்த காலி இடத்தில் புதிய வகுப்பறைகள் கட்டிக்கொடுத்தால் மாணவர்களின் கல்வித் திறன் இன்னமும் மேம்பாடு அடையும் என்பதை வலியுறுத்தி பல்வேறு முயற்சிகளை இப்பள்ளி நிர்வாகக்குழு எடுத்தும் இதுவரை சாத்தியப்படவில்லை.

இந்நிலையில், புதன்கிழமை இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் செல்வா உள்ளிட்டோரும் மக்கள் நீதிமய்ய நிர்வாகி ஜெய்பார்த்தீபன், ஆம் ஆத்மி நிர்வாகிகள் உள்பட 50 -க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் வடக்கு ராஜவீதியில் உள்ள பள்ளியின் வாயிலருகே சாலையில் அமர்ந்து மேற்காணும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா, நகர காவல்துணை கண்காணிப்பாளர் ராகவி, ஆய்வாளர் குருநாதன், வட்டாட்சியர் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வரும் 18 ஆம் தேதி சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை ஒத்தி வைப்பதாகக் கூறி அனைவரும் கலைந்து சென்றனர். ஏறத்தாழ 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இது குறித்து நகராட்சி 9 வது வார்டு உறுப்பினர் செந்தாமரை பாலு கூறியதாவது: பள்ளி மேலாண்மைக்குழு சார்பில், கூடுதல் பள்ளிக்கட்டிடம், கூடுதல் ஆசிரியர்கள் , குடிநீர் கழிப்பறை உள்ளிட்டவை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளிக்கப்பட்டது.இதையடுத்து கல்வித்துறை சார்பில் 2 நிரந்தர ஆசிரியர்கள் கூடுதல் பொறுப்பில் 9 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வகுப்பறை கட்டுவது தொடர்பான கோரிக்கை குறித்த மனு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் பரிந்துரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் அளிக்கப்பட்டது. கட்டிடம் கட்டுவதற்காக இந்த ஆண்டில் நிதி ஒதுக்க முடியாததால், அடுத்த நிதியாண்டில் இப்பள்ளிக்கு நிதி ஒதுக்குவதாக உறுதியளித்துள்ளார். இப்பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றார் செந்தாமரை பாலு.

Updated On: 10 Aug 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  2. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  3. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  4. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  6. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  7. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  8. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  9. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  10. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...