/* */

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு 2021-22 ஆம் ஆண்டிற்கு சம்பா நெற்பயிருக்கு ஏக்கருக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.31,000 கடன் தொகையில், விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை 1.5 சதவீதம் மட்டுமே ஆகும். அதன்படி, ஏக்கருக்கு ரூ.465 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. நடப்பாண்டில் இத்திட்டத்தினை செயல்படுத்திட அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட் (AICIL) என்ற பயிர் காப்பீடு நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். நடப்பு சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 15.11.2021 ஆகும்.

இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது, முன்மொழிவு படிவம், பதிவு படிவம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் 1431 பசலிக்கான அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரீமியத் தொகையினை தொடர்புடைய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொது சேவை மையங்களிலோ காப்பீடு செய்து அதற்குரிய ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்ப்பதற்கும், தங்களுடைய விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பதிவு செய்த விவரங்களை சரிபார்ப்பதற்கும், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், காப்பீட்டு பிரிமீயத் தொகையை செலுத்தி தங்களது நெற்பயிரை இயற்கை பேரிடர் பேரழிவினால் ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து வருவாய் இழப்பினை விவசாயிகள் ஈடு செய்யலாம்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தினையோ அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தினையோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Updated On: 4 Oct 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?