/* */

புதுக்கோட்டை வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.49.97 கோடி கடனுதவி

வங்கிகள் மூலம் வழங்கப்படும் தனிநபர் கடன், சுயதொழில் கடன், தொழில் கடன் போன்றவை குறித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டது

HIGHLIGHTS

புதுக்கோட்டை  வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.49.97 கோடி கடனுதவி
X

புதுக்கோட்டைஆயுதப்படை சமுதாயக் கூடத்தில்  வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு திட்டம் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் நடைபெற்ற வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு திட்ட முகாமில் 849 பயனாளிகளுக்கு ரூ.49.97 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆயுதப்படை சமுதாயக் கூடத்தில் மாபெரும் வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு திட்டம் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் இன்று (18.10.2021) நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்து வங்கிகளின் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். மேலும் நேர்மைக்கான குடிமக்களின் உறுதிமொழியினை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 24 வங்கிகளும் அதனுடைய 217 கிளைகளும் பொதுமக்கள் சேவையில் செயல்பட்டு வருகிறது. வங்கி சேவைகள் குறித்து வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து வங்கிகளும் ஓர் இடத்தில் குழுமி மாபெரும் வங்கி வாடிக்கையாளர் தொடர்பு திட்ட முகாம் இன்றையதினம் நடைபெற்று வருகிறது. மேலும் இம்முகாமில் 849 வாடிக்கையாளர்களுக்கு ரூ.49.97 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவித் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது.

இம்முகாமில், பொதுமக்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் தனிநபர் கடன், சுயதொழில் கடன், தொழில் கடன் போன்ற பல்வேறு கடன்கள் குறித்து விளக்கமாக விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு வங்கிகளும் ஓர் இடத்தில் இருப்பதால், பொதுமக்கள் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன்தொகைகள் குறித்தும் வட்டி விகிதம் குறித்தும் தெரிந்து கொண்டு பயன்பெறலாம். எனவே, இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் வங்கிகளில் நடைமுறையில் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டு பயன்பெறலாம் என்றார் ஆட்சியர்.

இம்முகாமில், மகளிர் திட்ட இயக்குநர்ரேவதி, ஐஓபி வங்கி காரைக்குடி மண்டல முதன்மை மேலாளர் வி.மலர்விழி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆர்.ரமேஷ், பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) திரிபுர சுந்தரி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட திட்ட மேலாளர் (தாட்கோ) முத்துரத்தினம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Oct 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்