/* */

தொடர் மழையின் காரணமாக பொரியின் விலை கிடுகிடு உயர்வு

நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படும் நிலையில், தொடர் மழையால் பொரியின் விலை உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

தொடர் மழையின் காரணமாக   பொரியின் விலை கிடுகிடு உயர்வு
X

ஆயுத பூஜையை முன்னிட்டு,  புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள கடைகளில், பொருட்களை வாங்கும் பொது மக்கள்.

நாளை ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பண்டிகைக்கு மிக முக்கியமான பொருளாகக் கருதப்படுவது பொரி, பொட்டுக்கடலை, அவல், பழங்கள், பூ இவைகளை வைத்து கடைகளிலும், வீடுகளிலும் ஆயுதபூஜை கொண்டாடப்படுவது வழக்கம். நாளை ஆயுத பூஜையை முன்னிட்டு, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் விலை, தொடர் மழையின் காரணமாக அதிகரித்துள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வந்ததால், பொறி உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் மிகுந்த பாதிப்படைந்து வந்துள்ளனர். காயவைத்த அரிசி தொடர் மழையில் நனைந்து காயாமல் ஈரப்பதமாக இருந்ததால் அதிக அளவில் பொரியை உற்பத்தி செய்ய முடியவில்லை.

புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள கடைகளில் தொடர் மழையின் காரணமாக அதிக அளவில் பொரி முட்டைகள் உற்பத்தி செய்ய முடியாததால் பொரியின் விலை அதிகரித்து உள்ளது. குறிப்பாக 300 ரூபாய்க்கு மூட்டை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது தொடர் மழையின் காரணமாக 450 ரூபாய்க்கு ஒரு முட்டை பொரி விற்பனை ஆகி வருகிறது.

Updated On: 13 Oct 2021 1:41 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  6. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  7. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...