/* */

பள்ளி மாணவிக்கு தொலைபேசியில் ஆபாச மிரட்டல்: பாேக்சாேவில் இளைஞர் கைது

புதுக்கோட்டையில் பள்ளி மாணவியிடம் தொலைபேசியில் ஆபாசமாக பேசி மிரட்டிய 19 வயது இளைஞர் பாேக்சாே சட்டத்தின்கீழ் கைது.

HIGHLIGHTS

பள்ளி மாணவிக்கு தொலைபேசியில் ஆபாச மிரட்டல்: பாேக்சாேவில் இளைஞர் கைது
X

பள்ளி மாணவிக்கு தொலைபேசியில் ஆபாசமாக பேசிய இளைஞர் முகமது ஷேக் கைது.

புதுக்கோட்டையில் பதினோராம் வகுப்பு மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி மிரட்டிய 19 வயது முகமது ஷேக் என்ற இளைஞர் பாேக்சாே சட்டத்தின் கீழ் கைது.

புதுக்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் முகமது ஷேக் என்பவர் தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியும் காதலிக்கவில்லை என்றால் உன்னைப் பற்றி தவறான தகவலை வெளியிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது .

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கணேஷ் நகர் போலீசார் பாேக்சாே சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து இளைஞர் முகமது ஷேக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பாேக்சாே சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு வருவது பெண்களையும் அவர்களது பெற்றோர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Updated On: 24 Sep 2021 5:42 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  10. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை