/* */

காவல்துறை சார்பு ஆய்வாளர் பணி: புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 மையங்களில் எழுத்துத் தேர்வு

Police Sub Inspector job examination in 2 centers in Pudukkottai district

HIGHLIGHTS

காவல்துறை சார்பு ஆய்வாளர் பணி: புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 மையங்களில் எழுத்துத் தேர்வு
X

புதுக்கோட்டை எஸ்பி நிஷா பார்த்திபன்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேரடி சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு ஜூன் 25 -ல் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் வெளியிட்ட தகவல்: தமிழக காவல்துறையில் 2022-ம் ஆண்டிற்கு மாநிலம் முழுவதி லுமுள்ள 39 தேர்வு மையங்களில் 444 சார்பு ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வு வரும் 25.06.2022 (சனிக்கிழமை) அன்று பொது விண்ணப்பதாரர் களுக்கு (Open Candidates) காலை மற்றும் மதியம் நடைபெற வுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2879 ஆண் விண்ணப்ப தாரர்களுக்கும் 1153 பெண் விண்ணப்பதாரர்களுக்கும் (மொத்தம்: 4032) எழுத்துத் தேர்விற்கான அழைப்புக் கடிதங் கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் இணையதளம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

2) விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் புதுக்கோட்டை அருகே சிவபுரம் ஜெ.ஜெ கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரி ஆகிய 2 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.

3) எழுத்துத் தேர்விற்கு வரும் விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட பொருட்களை மட்டுமே உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கப் படுவார்கள்.

அழைப்பு கடிதம் (Call Letter).

அடையாள அட்டை (Call Letter ).

பரிட்சை அட்டை (Writing pad).

கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனா (Blue or Black ball Point Pen).

4) மேற்கண்ட பொருட்களை தவிர வேறு எதையும் உதாரணமாக செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் முதலியன கண்டிப்பாக தேர்வு மையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

5) விண்ணப்பதாரர்கள் தேர்வு நாளன்று Main written Exam தேர்விற்கு காலை சரியாக 08.30 மணிக்கும் தமிழ் தகுதி தேர்விற்கு பகல் சரியாக 02.00 மணிக்கும் தங்களது தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை முழுமையாக படித்து தெரிந்து வரவேண்டும்.

6) புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள எழுத்துத் தேர்விற்கு சிறப்பு மேற்பார்வையாளராக மத்திய மண்டல காவல்துறைத் தலைவர்.சந்தோஷ்குமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

7) புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் 25.06.2022ம் தேதி காலை 06.00 மணி முதல் இயக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Jun 2022 1:09 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா