/* */

உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் பகுதிகளின் கோரிக்கை மனுக்கள்: அக்.16 -க்குப்பின் தீர்வு

விண்ணப்பதாரர்கள் தங்களது மனுவில் தங்களது ஆதார் எண், கைப்பேசி எண் மற்றும் இதர விவரங்களை குறிப்பிட்டு மனு அளிக்க வேண்டும்

HIGHLIGHTS

உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் பகுதிகளின் கோரிக்கை மனுக்கள்: அக்.16 -க்குப்பின் தீர்வு
X

புதுக்கோட்டை கலெக்டர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலிருந்து பெறப்படும் மனுக்கள் மீது 16.10.2021 -ஆம் தேதிக்கு பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: தமிழக முதலமைச்சர் ஆணையின்படி திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மீண்டும் வருகிற திங்கட்கிழமை (04.10.2021) முதல் பிரதிவாரம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அதுசமயம் அரசு, அறிவித்துள்ள வழி முறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியினை கடைபிடித்தும் முகக்கவசம் அணிந்தும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்கள் – 2021 நடைபெறும் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே,தற்செயல் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலிருந்து பெறப்படும் மனுக்களை ஒரு பெட்டியில் பாதுகாப்பாக வைத்து, 16.10.2021-ஆம் தேதிக்கு பிறகு அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது மனுவில் தங்களது ஆதார்எண், கைப்பேசிஎண் மற்றும் இதர விவரங்களை குறிப்பிட்டு மனு அளிக்க வேண்டும். மேலும், குறைதீர் முகாமில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், குறை தீர் கூட்டத்துக்கு வரும் பொதுமக்கள் இதனை பயன்படுத்திகொள்ளலாம்.

Updated On: 2 Oct 2021 7:21 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்