/* */

எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு கூட்டத் தொடரை நடக்கவிடாமல் செய்தன: ஜி.கே.வாசன்

தமிழக அரசு பழிவாங்கும் அரசியலை கைவிட்டு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்

HIGHLIGHTS

எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு கூட்டத் தொடரை நடக்கவிடாமல் செய்தன: ஜி.கே.வாசன்
X

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.

எதிர்க்கட்சிகள் முன்கூட்டியே திட்டமிட்டு தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த விடாமல் செய்துள்ளன என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் குற்றம்சாட்டினார்.புதுக்கோட்டையில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சிறு, குறு விவசாயிகள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களை முறைப்படுத்தி, உடனடியாக விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு கொடுத்த உத்தரவாதமான நகை கடன் தள்ளுபடியை, சரியான பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..தடையில்லாத மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.7 பேர் விடுதலை தொடர்பாக சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும் இந்த பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழக அரசு பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்க வேண்டும். இதுதான் அரசியல் பண்பாடாக இருக்கும்.

நாடாளுமன்ற இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கியது தற்செயலானது அல்ல முன்கூட்டியே திட்டமிட்டு முடக்கப்பட்டது. ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை எதிர்க்கட்சிகள் இரு அவைகளையும் முடக்கியது நாடாளுமன்ற விதிகளை மீறி எதிர்க்கட்சிகள் செயல்பட்டது வருத்தமளிக்கிறது. இனிவரும் காலங்களில் இந்த நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க நாடாளுமன்றக் சபாநாயகர் ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.

திமுக ஆட்சியின் 100 நாட்களில் மக்கள் எதிர்பார்க்கின்ற திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை பற்றி அரசு கவலைப்படவில்லை. நிதிநிலை அறிக்கையை காரணம்காட்டி, கொடுத்த வாக்குறுதிகளை ஐந்தாண்டு பத்தாண்டு திட்டம் என்று அறிவித்துள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்றும், வாக்குறுதிகளை செயல்படுத்துவார்களா மாட்டார்களா என்ற கேள்வி மக்கள் மனதில் தற்போது எழுந்துள்ளது.ஆகம விதிகளை அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பின்பற்ற வேண்டும் என்றார் ஜி.கே.வாசன்.

Updated On: 20 Aug 2021 12:22 PM GMT

Related News