/* */

புதுக்கோட்டை போஸ் நகர் திட்டப்பகுதியில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு

சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை திறந்து வைத்தார்

HIGHLIGHTS

புதுக்கோட்டை  போஸ் நகர் திட்டப்பகுதியில்  384 அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக புதுக்கோட்டை போஸ்நகர் திட்டப் பகுதியில் ரூ.35.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 384 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக புதுக்கோட்டை போஸ்நகர் திட்டப் பகுதியில் ரூ.35.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 384 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (07.12.2022) சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், புதுக்கோட்டை , போஸ்நகர் திட்டப் பகுதியில் கட்டப்பட்டுள்ள 384 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து போஸ்நகரில் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற விழாவில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி பயனாளிகளுக்கு குடியிருப்பிற்கான ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞரால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் முதன்மையான செயல்பாடாக இருந்தாலும், நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது, அவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கருதி தமிழ்நாடு முதலமைச்சர் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, போஸ்நகர் திட்டப்பகுதியில் ரூ.35.14 கோடி செலவில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 384 அடுக்குமாடி குடியிருப்புகள், ஒவ்வொன்றும் 400 சதுர அடி பரப்பளவில் வசிப்பறை, சமையலறை, படுக்கை அறை, குளியல் அறை மற்றும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

பின்னர் அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது; நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள குடிசை பகுதியில் வாழும் மக்களுக்கு தரமான மளிவு விலையில் வீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், பொதுமக்களுக்கு வீடுகள் கட்டி வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக போஸ்நகர் திட்டப் பகுதியில் ரூ.35.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 384 அடுக்குமாடி குடியிருப்புகளை இன்றையதினம் திறந்து வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் குடிசை வீடுகளில் வாழ்ந்து வரும் இலட்சக்கணக்கான பொதுமக்களின் அடுக்குமாடி குடியிருப்புக் கனவு நினைவாகியுள்ளது.

மேலும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சராஸ் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இன்றையதினம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை பெற்றவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவும், மற்றவர்களுக்கு கூடிய விரைவில் மற்ற இடங்களில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்ற துணைத் தலைவர் எம்.லியாகத்அலி, நிர்வாகப் பொறியாளர் (திருச்சி கோட்டம்) த.இளம்பரிதி, உதவி நிர்வாகப் பொறியாளர் ச.ஷகிலாபீவி, உதவிப் பொறியாளர் மு.நவநீதகண்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்;

Updated On: 7 Dec 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்