/* */

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு:அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி

15 ஆண்டுகளில் கொண்டுவரக்கூடிய மருத்துவமனை கல்லூரிகளை ஒரே ஆண்டில் கொண்டு வந்தது அதிமுகவின் சாதனை என்றார் விஜயபாஸ்கர்

HIGHLIGHTS

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு:அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி
X

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பூஸ்டர் தோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மூன்றாவது மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதன் பின்னர் மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் தடுப்பூசி செலுத்தும் சதவீதம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்: மருத்துவர் என்ற முறையில் மூன்றாவது தவணை பூஸ்டர் டோஸ் இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செலுத்திக் கொண்டேன் .தடுப்பூசி அவசியம் மற்றும் அத்தியவசியம் என்று தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகிறோம்

கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் உலக நாடுகள் பல நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். நாம் பூஸ்டர் டோஸ் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.தற்போது பாரதப் பிரதமர் பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.தற்போது தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில் நமக்கு தடுப்பூசி மற்றும் முக கவசம்தான் பேராயுதம் 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்ட வேண்டும்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். இரண்டு அலைகளில் கொரோனாவின் தாக்கம் வீரியம் ஆகியவற்றை நாம் கண்கூடாக பார்த்து விட்டோம்.இந்நிலையில் மூன்றாவது அலையில் நாம் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.தடுப்பூசி குறித்தும் முகக்கவசம் அணிவதன் குறித்தும் கூடுதல் விழிப்புணர்வு தமிழக அரசு பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.அதிக அளவு பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள் அதற்கேற்றவாறு அரசு தயாராக இருக்க வேண்டும்

ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை நேற்று பாரத பிரதமர் தொடங்கி வைத்துள்ளதற்கு எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு மைல்கல் அதிமுக அரசு இதற்காக எவ்வளவு முனைப்பு எடுத்தது கஷ்டப்பட்டது என்பது கண்கூடாக அனைவரும் அறிந்தது.15 ஆண்டுகளில் கொண்டுவரக்கூடிய மருத்துவமனை கல்லூரிகளை ஒரே ஆண்டில் நாம் கொண்டு வந்துள்ளோம்

இது அதிமுக அரசுக்கு கிடைத்த வெற்றி 11 மருத்துவ கல்லூரிகளிலும் 200 மாணவர் சேர்க்கை இடங்கள் இன்னமும் மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும் தமிழக அரசு அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மாணவர் சேர்க்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.நாகை ராமநாதபுரம் ஊட்டி ஆகிய மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்கியிருப்பது எனக்கு மன நிம்மதியை தருகிறது அந்த பகுதிகளுக்கு மருத்துவர்களை நியமிப்பதும் என்பது மிகக் கடினமான காரியம்

அந்தப் பகுதிகளில் தற்போது மருத்துவ கல்லூரிகள் வந்திருப்பது எனக்கு மன நிறைவைத் தந்துள்ளது. வரும் காலங்களில் ஏற்கனவே நடந்து வரும் ஜைக்கா திட்டப்பணிகள் உள்ளிட்ட பணிகள் முடிவடையும் தமிழக சுகாதாரத்துறை சிகரத்தின் உச்சிக்கே செல்லும் இது அதிமுக அரசுக்கு கிடைத்த வெற்றி.பொது மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் அவர்களது உயிரும் மிக முக்கியம் எனவே அரசு மூன்றையும் சமநிலையில் வைத்து முடிவு எடுக்க வேண்டும்.

இருக்கக்கூடிய கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடித்தால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்.ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஆன்லைனில் வகுப்புகளை நடத்த உயர்நீதிமன்றம் பரிந்துரைப்பது வரவேற்கத்தக்கது.தற்போது தொற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் ஒரே நேரத்தில் கிளஸ்டர் உருவானால் பாதிப்பு அதிகமாகும். தமிழக அரசு இதனை உற்றுநோக்கி உரிய முடிவு எடுக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.



Updated On: 13 Jan 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்