/* */

புதுக்கோட்டையில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு மாநில செயற்குழு க் கூட்டம்

குடியுரிமை சட்டம் எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு மாநில செயற்குழு க் கூட்டம்
X

புதுக்கோட்டை கற்பகவிநாயகர் திருமண மண்டபத்தில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின்   மூன்றாவது மாநில செயற்குழு  கூட்டம் நடைபெற்றது 

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு மாநில செயற்குழு புதுக்கோட்டையில் கற்பகவிநாயகா மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மாநில தலைவர் மவ்லவி ஜெயினுலாபுதீன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அலாவுதீன்அன்சாரி, அதிராம்பட்டினம் தாஜுதீன் ஜாகிர் உசேன், மாநில செயலாளர் முகமது இக்பால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள்: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் குடியுரிமை சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று உறுதியுடன் கூறியதற்கு நன்றி தெரிவிப்பது. இந்த குடியுரிமை சட்டம் எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது .

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கஞ்சா அபின் போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதால் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் அதிக அளவில் போதைப்பொருளால் அடிமையாகி வரும் சூழ்நிலையில் இருந்து வருகிறது இதனை தடுக்கும் விதத்தில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அசாம் மாநிலம், பால்பூர் மாவட்டத்தில் இஸ்லாமியர்களை படுகொலை செய்ததை இந்த வன்மையாக கண்டிப்பது. வாணியம்பாடி வாசிம் படுகொலையை கண்டித்து அந்த குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலச் செயலாளர் முகமது இக்பால் நன்றி கூறினார். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த அனைத்து நிர்வாகிகளும் கலந்து கலந்துகொண்டனர்.

Updated On: 26 Sep 2021 11:12 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு