மோடி பிறந்த நாள்: அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று பல்வேறு வகையான 400 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 400 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

பிரதமர் மோடியின் 71-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட துணைத் தலைவர் சாந்திமுத்து ஏற்பாட்டின் பேரில், பிரதமர் மோடியின் 71-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று பல்வேறு வகையான 400 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்த நிகழ்வில், மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி கலந்து கொண்டு, மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். இதில், பாரதிய ஜனதா கட்சி புதுக்கோட்டை மாவட்ட பார்வையாளர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் ராம. சேதுபதி, மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் விஜயகுமார் மற்றும் மகளிர் அணி உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.


Updated On: 2021-09-28T16:15:51+05:30

Related News