/* */

புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் உருவச்சிலைக்கு அமைச்சர்கள் நேரு, ரகுபதி மரியாதை

Ministers Nehru and Raghupathi pay homage to Pudukkottai Samasthana King statue

HIGHLIGHTS

புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்  உருவச்சிலைக்கு அமைச்சர்கள் நேரு, ரகுபதி மரியாதை
X

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபாலதொண்டைமான் உருவச்சிலைக்கு மரியாதை செய்த அமைச்சர் கே.என். நேரு. உடன் அமைச்சர் எஸ். ரகுபதி, எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்டோர்

புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை யிலுள்ள அவரது உருவச்சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோர் (24.06.2022) பங்கேற்று மன்னரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர்ஸ மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவர்களின் குடும்பத்தார்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதுக்கோட்டை நகரில் தமிழக அரசின் சார்பில் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைத்திட ராஜா ராஜகோபால தொண்டைமான், தான் வாழ்ந்த அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொகைக்கு மகிழ்ச்சியுடன் அரசிற்கு வழங்கினார். அன்னாருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாமன்னர் உருவச் சிலையினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் திறந்து வைத்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மன்னர் ராஜகோபால தொண்டைமான் மாளிகை என்றும் பெயர் சூட்டினார்.

மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இவ்வேளையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மன்னரின் உருவச்சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா அவர்கள், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், முன்னாள் திருச்சி மாநகர மேயர் சாருபாலா தொண்டைமான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கவிதைப்பித்தன், பெரியண்ணன்அரசு, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் லியாகத்அலி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், விழாக்குழு செயலாளர் சம்பத்குமார், மன்னர் குடும்பத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 24 Jun 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  3. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  4. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  6. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  9. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்