பணியிடங்களை நிரப்ப கோரி மருந்தாளுனர்கள் போராட்டம்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பணியிடங்களை நிரப்ப கோரி மருந்தாளுனர்கள் போராட்டம்
X

காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் மக்கள் நலன் கருதி காலியாக உள்ள 780க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 2000 மினி கிளினிக்குகள் மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணி நேரம் 9 மணி முதல் 4 மணிவரை என்ற அரசாணையை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து இதுநாள் வரை கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

ஆனால் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மருந்தாளுநர்கள் தமிழக அரசை கண்டித்தும் தங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மருந்தாளுநர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 8 Jan 2021 11:40 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  முதல்வரின் அறிவிப்பு.. சிறப்பான அங்கீகாரம்: டாக்டர் அன்புமணி பாராட்டு
 2. டாக்டர் சார்
  caladryl lotion uses in tamil சரும நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் ...
 3. சோழவந்தான்
  சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி...
 4. வானிலை
  தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம்
 5. அருப்புக்கோட்டை
  காரியாபட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கு, ஆக்கிரமிப்பை அகற்ற...
 6. டாக்டர் சார்
  cipco pharmaceuticals தொற்று நோய்களை எதிர்த்துப் போராட சிப்கோ வைரஸ்...
 7. சேலம்
  “ஏற்காடு எங்கள் பெருமை” விழிப்புணர்வு நடைப்பயணம்: எம்எல்ஏ, ஆட்சியர்...
 8. லைஃப்ஸ்டைல்
  Betrayal quotes in tamil-துரோகித்து வெல்வதைவிட நேர்மையாக தோற்பது...
 9. தமிழ்நாடு
  mavattam in tamilnadu தமிழக மாவட்டங்களின் சிறப்பு பற்றி தெரியுமா...
 10. ஈரோடு
  பண்ணாரி அம்மன் கோவில் அருகே சுற்றித்திரிந்த காட்டு யானையால் பீதி