/* */

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்

HIGHLIGHTS

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக   தரம் உயர்த்த நடவடிக்கை
X

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் செறிவூட்டப்பட்ட குடிநீர் வழங்கும் கருவிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட குடிநீர் வழங்கும் கருவியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

பின்னர்நிகழ்ச்சியில் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் வலையப்பட்டி மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி வளாகத்தில் ரூ.6.22 லட்சம்மதிப்பீட்டிலும் புதிதாக அமைக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட குடிநீர் வழங்கும் கருவிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட குடிநீர் வழங்கும் கருவி பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாகஅமையும். மேலும் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட ஒரு குடம் தண்ணீர்ரூ.5க்கு வழங்கப்படுகிறது. இந்த கட்டணம் பராமரிப்பு செலவிற்கு வாங்கப்படுகிறது. இதனை பொது மக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் கூடுதலாக செறிவூட்டப்பட்ட குடிநீர் வழங்கும் கருவிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இப்பகுதியில்ஏற்கனவே நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சிட்கோமூலம் 25 சதவீத மானியத்தில்ஆயத்த ஆடை நிறுவனம் உள்ளிட்ட சுயதொழில் தொடங்கவும், அதற்கு வங்கி கடனுதவி பெற்று தரவும் மாவட்ட தொழில் மையம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில் மின் கட்டணத்திற்கு 20 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. பொன்னமராவதி பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் சிட்கோதொழிற்பேட்டை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற உள்ளது. இப்பணி முடிந்தவுடன் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொன்னமராவதிபேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தும் வகையில் பேரூராட்சியின் அருகில் உள்ள பகுதிகளை இணைத்து நகராட்சியாக உருவாக்கஉரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பேசினார்.

இந்நிகழ்வில்திருச்சிராப்பள்ளி மண்டல பேரூராட்சிகளின் உதவிஇயக்குநர் விஸ்வநாதன், புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் இளங்கோவன், பொதுசுகாதார துணை இயக்குநர் மருத்துவர் கலைவாணி, பொன்னமராவதி ஒன்றியக் குழுத் தலைவர் சுதா, அடைக்கலமணி, பேரூராட்சி அலுவலர் தனுஷ்கோடி, வர்த்தக சங்கத் தலைவர் பழனியப்பன் மற்றும் அழகப்பன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 July 2021 11:31 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்