ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்: குழந்தைகளுக்கு அமுதூட்டும் முகாம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களிலும் முதல்- மூன்றாவது திங்கள்கிழமைகளில் நடத்தப்பட உள்ளது

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்: குழந்தைகளுக்கு அமுதூட்டும் முகாம் தொடக்கம்
X

ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டம் மூலம் நடைபெற்ற குழந்தைகளுக்கு அமுதூட்டும் நிகழ்வை தொடக்கி வைத்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் குழந்தைகளுக்கு முதல் அமுதூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் இன்று நடைபெற்ற குழந்தைகளுக்கு அமுதூட்டும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடக்கி வைத்து பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்திட்டத்தின் சார்பில் சமூகம் சார்ந்த நிகழ்வாக 6 மாதங்கள் நிறைவடைந்த 12குழந்தைகளுக்கு முதல் அமுதூட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த, முதல் அமுதூட்டும் நிகழ்வில் பிறந்து 6 மாதங்கள் நிறைவடைந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் இதர உணவுகள் இணை உணவாக வழங்கப்பட்டது. இதுபோன்ற நிகழ்வுகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களிலும் முதல் மற்றும் மூன்றாவது திங்கள்கிழமைகளில் சமூகம் சார்ந்த நிகழ்வாக நடத்தப்பட உள்ளது.

தேசியஊட்டச்சத்து மாதம்கொண்டாடப்பட்டு வருவதால் முதல் அமுதூட்டும் விழா தாய்ப்பாலுடன் இணைஉணவு வழங்குவதன் அவசியம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் நெய், கடலை மிட்டாய், பொட்டுக்கடலை, வெல்லம், பேரிச்சம்பழம், பிஸ்கட் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டதுடன், அங்கன்வாடி மையங்களில் வீட்டுத்தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், அங்கன்வாடிப் பணியாளர்கள் அனைவருக்கும் விதைகள், மரக்கன்றுகள் மற்றும் உரங்களும் வழங்கப்பட்டுள்ளது என்றார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் ரேணுகா, அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகளின் தாய்மார்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Updated On: 14 Sep 2021 7:52 AM GMT

Related News