புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக்குழு ஆய்வு

பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதி செலவினம் குறித்து சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழு ஆய்வு

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக்குழு ஆய்வு
X

புல்வயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழு தலைவர்   செல்வப்பெருந்தகை மற்றும் உறுப்பினர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழுதலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழு தலைவர் கு.செல்வப்பெருந்தகை மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையிவ் இன்று (23.11.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழு தலைவர் கு.செல்வப்பெருந்தகை மற்றும் உறுப்பினர்கள்;, புதுக்கோட்டை நகராட்சி, மாலையீடு பகுதியில், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சிகிச்சை பெறுபவர்கள் காத்திருக்கும் அறை, சிகிச்சை அளிக்கும் அறை, யோகா அறை, ஊசி செலுத்தும் அறை உள்ளிட்டவைகளுடன் 78.90 சதுர மீட்டர் பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்ப்புற நலவாழ்வு மையத்தினை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து புல்வயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மருந்து இருப்பு பதிவேடுகளின்படி மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது குறித்தும், பிரசவத்திற்கு பின் கவனிப்பு வார்டினுள் பிரசவித்த குழந்தைகள் அனைவருக்கும் முறையாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட 'மக்களைத் தேடி மருத்துவம்" திட்டம் செயல்படுத்தப்பட்டுவரும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்கள்.

குடுமியான்மலை அரசு தோட்டக்கலைப் பண்ணையினை பார்வையிட்ட தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் காய், கனி மரக்கன்றுகள் குறித்தும், இம்மையத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப ஆலோசனைகள் குறித்தும் கேட்டறிந்தார்கள். மேலும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த கீரை வகைகள், மூலிகை வகைகள் குறித்து நேரில் பார்வையிட்டு, அவற்றின் பயன்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

மேலும் குடுமியான்மலை அரசு தோட்டக்கலைப் பண்ணையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு வகையான ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையின் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இப்பண்ணையில் சப்போட்டா மரக்கன்றுகளை நடவு செய்து, குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி முறை, பழச் செடிகளில் ஒட்டு கட்டும் முறை, பதியன் முறையில் அழகுச் செடிகள் உருவாக்கும் முறைகள், உயிர் உரம் உற்பத்தி குறித்த செயல்முறை கண்காட்சிகள் தோட்டக்கலைத்துறையினரால் செய்து காண்பிக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நலன் அரசு கல்லூரி மாணவர் விடுதி, ஆதிதிராவிடர் நலன் அரசு கல்லூரி மாணவியர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நலன் அரசு கல்லூரி மாணவர் விடுதி ஆகிய 3 விடுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழுவினர் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்தும், அவற்றின் தரம் குறித்தும், விடுதியின் அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்கள். மேலும் விடுதி வளாகத்தினை தூய்மையாக பராமரிக்கவும், நிழல் தரும் மரக்கன்றுகளை அதிக அளவில் நட்டு வளர்க்கவும் அறிவுறுத்தினார்கள். மேலும் புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதி செலவினம் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழு தலைவர் கு.செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் இன்றையதினம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு உடனிருந்தார்.

இந்த ஆய்வுகளின்போது, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர்எஸ்.காந்திராஜன், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி , காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர்.ம.சிந்தனை செல்வன் , மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து , பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை , மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் கு.மரகதம் குமரவேல், சார்பு செயலாளர்ஜெ.பாலசீனிவாசன் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 23 Nov 2022 3:30 PM GMT

Related News

Latest News

 1. தேனி
  தேனியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்.. நிரந்தர தீர்வுக்கு செய்ய...
 2. தேனி
  தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் நடவுப் பணிகள் நிறைவு..
 3. மதுரை மாநகர்
  இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு...
 4. விராலிமலை
  கீரனூரில் இருந்து புலியூருக்கு பேருந்து வசதி: ஜனநாயக மாதர் சங்கம்...
 5. துறைமுகம்
  கடற்படை தினத்தையொட்டி போர்க் கப்பல்களை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
 6. சென்னை
  திருநெல்வேலி எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு.. ஆதிதிராவிடர் மாநில ஆணையம்...
 7. புதுக்கோட்டை
  வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சியினர் காத்திருப்புப்...
 8. சென்னை
  தகுதி இல்லாதவர்களுக்கு அரசு வீடுகள் ஒதுக்கீடு.. அதிகாரிகள் மீது...
 9. சிவகாசி
  விபத்தை ஏற்படுத்திய பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
 10. இந்தியா
  விழிஞ்சம் துறைமுகத்தில் மத்தியப் படை பாதுகாப்பு கோரி அதானி குழுமம்...