/* */

இந்தியாவின் முதல் பெண் ஆதீனத்தில் குரு பூஜை, அன்னதான விழா

புதுக்கோட்டை சாயிமாதா சிவபிருந்தாதேவி ஆதீனத்தின் அதிஷ்டானத்தில் 24 -ஆம் ஆண்டு குரு பூஜை விழா நடந்தது

HIGHLIGHTS

இந்தியாவின் முதல் பெண் ஆதீனத்தில் குரு பூஜை, அன்னதான விழா
X

நாட்டின் முதல் பெண் ஆதீனமாகத் திகழ்ந்த புதுக்கோட்டை சாயிமாதா சிவபிருந்தாதேவி ஆதீனத்தின் அதிஷ்டானத்தில் 24 -ஆம் ஆண்டு குரு பூஜை விழா மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவின் முதல் பெண் ஆதீனத்தில் குரு பூஜை, அன்னதான விழா

சமய, சமூகப் பணிகளை ஆற்றிய நாட்டின் முதல் பெண் ஆதீனமாகத் திகழ்ந்த புதுக்கோட்டை சாயிமாதா சிவபிருந்தாதேவி ஆதீனத்தின் அதிஷ்டானத்தில் 24 -ஆம் ஆண்டு குரு பூஜை விழா மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மச்சுவாடி ஜீவா நகர் மூன்றாம் வீதியில் நடைபெற்ற குரு பூஜை விழாவில் திருமுறை மற்றும் பக்தி பாடல்களை ஆர். மணிகண்டன் இசைத்தார். ஆதீனம் தயானந்தசந்திரசேகரன் குருபூஜை வழிபாடுகளை நடத்தினார். இதைத் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

பொன்மாரி கல்விக்குழுமம் தலைவர் டாக்டர் எஸ். இராமதாஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (ஓய்வு) எஸ். சிவாஜி, அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி முன்னாள் முதல்வர் அரங்க இராமானுசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்ணப்ப நாயனார் கண்தான பிரசார மையம் தலைவர், டாக்டர். சி. கோவிந்தராசன், இளங்கோவடிகள் மன்றம் பொருளாளர் மு. இராமுக்கண்ணு, 10-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் எம்.பால்ராஜ், மூத்த குடிமக்கள் பேரவை தலைவர் க.இராமையா, அரசு மன்னர் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பொ. அண்ணாமலை, வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் கவிஞர். ஆர்.எம்.வீ. கதிரேசன், இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ஜி.எஸ். தனபதி, பொறியாளர் சங்கத்தலைவர் கண்ணன், கவிஞர் மன்றத்தலைவர் கவிஞர் நிலவை பழனியப்பன்.

மூத்த வழக்கறிஞர் மேனா. வீரப்பன், த.நா.மின்சார வாரியம் கணக்கு அலுவலர்(ஓய்வு) கே. செல்வராஜ், வாசகர் பேரவை தலைவர் பேராசிரியர் எஸ். விஸ்வநாதன், அரசு மருத்துவர் எஸ். ராமமூர்த்தி, கயிலைமலையான் திருக்கூட்ட தலைவர் கணபதிராஜேந்திரன், அம்மா அகிலா அறக்கட்டளை தலைவர் ந.புண்ணியமூர்த்தி, புத்தாஸ் மார்சியல் ஆர்ட்ஸ் தலைவர்சேது கார்த்திகேயன், அரிமளம் அன்னை வீரம்மாள்-அய்யாக்கண்ணு அருளிறக்க அறக்கட்டளை தலைவர் ஏ. செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மன்னராட்சி நடைபெற்ற புதுக்கோட்டை சமஸ்தான பரதக் கலைஞராக விளங்கிய திருக்கோகர்ணம் சிவராம நட்டுவனார் - நல்லம்மாள் தம்பதியின் ஏழு குழந்தைகளில் கடைசிப் பெண்ணாக 1927 இல் பிறந்தார் சிவபிருந்தா தேவி. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று கேட்ட காலம் அது. இளைய பருவத்திலேயே சுட்டியான பெண்ணாக வளர்ந்தவர். திருக்கோகர்ணம் பள்ளியிலும், பின்னர் ராணியார் பள்ளியிலும் படித்தார். இளம் பருவத்திலே இயல்பாக சமுதாயப் பார்வை அவருக்கு இருந்து வந்தது. ஆன்மீக நாட்டமும் அவருக்கு இருந்தது. பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டி பலவற்றில் சிவ பிருந்தா பல முதற்பரிசுகளைப் பெற்றவர். பேச்சுகளில் புராண நிகழ்ச்சிகளும், இலக்கியக் காட்சிகளும் கட்டாயமாக இடம் பெறும். கன்னி வயதிலேயே உரைத்திறம் பெற்றிருந்து . பிருந்தாதேவியின் பேச்சு வேகத்தைக் கண்டு பலரும் பிரமித்தனர்.

சைய சமய வரலாற்றில் புதிய அத்தியாயமாக ஒரு பெண் திருமடத்தின் தலைவியாக ஆதீனக்கர்த்தராக அருளாட்சி ஏற்று, அருள்பாலிக்கும் காட்சியைப் பெரும் வாய்ப்பு புதுக்கோட்டை மண்ணுக்கு வாய்த்தது. ஆம், 1983ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள் வியாழக்கிழமை பன்னிரு திருமுறை வேள்வியுடன் திருமடங்களின் குருமகா சந்நிதானங்கள், தொண்டைமண்டல ஆதீனம் திருவருள் திரு ஞானப்பிரகாச தேசிய பரமாச்சார்ய சுவாமிகள், பேரூர் ஆதீனம் திருவருள் திரு கயிலை மாமுனிவர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், சிவரை ஆதீனம் திருவருள் திரு சுந்தரம் சுவாமிகள் ஆகியோர் முன்னிலையிலும் அருளாசியிலும் அன்னையார் அவர்கள் திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் முதல் பெண் ஆதீனக்கர்த்தராக அருளாட்சியை ஏற்றார்.72 ஆண்டுகள் இப்புவியில் வாழ்ந்து பெண்ணினத்தின் அடையாளங்களில் ஒன்றாக அருளாட்சி செய்து வந்த அன்னையார் நவம்பர் 27, 1998ஆம் நாள் இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாரினார்.



Updated On: 6 Dec 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்