/* */

செயல்படும் எம்பியாக இருப்பேன்: எம்.எம் .அப்துல்லா பேச்சு

மாநிலங்களவைக்கு பொழுது போக்குவதற்காக சென்று வரும் உறுப்பினராக நான் இருக்க மாட்டேன்

HIGHLIGHTS

செயல்படும் எம்பியாக இருப்பேன்:  எம்.எம் .அப்துல்லா பேச்சு
X

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக் கழகத்தின் 48வது பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட   மாநிலங்களவை எம்பி அப்துல்லா விற்கு நினைவு பரிசுகள் வழங்கி சால்வையணிவித்து பாராட்டிய வர்த்தக சங்க நிர்வாகிகள்

புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட வர்த்தகக் கழகத்தின் 48வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவரும் மாவட்ட வர்த்தக கழகத் கௌரவ தலைவருமான சீனு சின்னப்பா, வணிக கொடியை ஏற்றி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழக தலைவர் சாகுல் ஹமீத் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வர்த்தக கழக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாநிலங்களவை எம்பி அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கி மாவட்ட வர்த்தக கழகத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதில், மாநிலங்களவை திமுத எம்பி அப்துல்லா பேசியதாவது: புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பலரும் என்னிடம் கோரிக்கை வைத்தனர். அதனை விரைவில் நிறைவேற்றித் தருவேன். நான் செயல்படும் மாநிலங்களவை உறுப்பினர். சும்மா போயிட்டு வருவதற்கான மாநிலங்களவை உறுப்பினர் நான் கிடையாது.

தற்போது இருக்கும் தமிழக அரசு. எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தொழில் தொடங்குவதற்கு பல்வேறு தொழில் நிறுவனங்கள் வந்துகொண்டிருக்கிறது.தமிழக அரசு தொழில் தொடங்குவதற்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு வருவதற்கு ஆர்வம் காட்டினாலு,ம் அதன் பயனாளிகள் யார் என்று பார்த்தால் நிச்சயம் நம்முடைய எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது.எனவே படித்தவர்கள் தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டவேண்டும். பல்வேறு சவால்கள் இருந்தாலும் அதனை கடந்து தொழில் தொடங்குவதற்கு படித்தவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார் எம்பி அப்துல்லா பேசினார்.

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக சங்கத்தின் தலைவராக மீண்டும் சாகுல் அமீது, செயலாளராக சாந்தம் சவரிமுத்து, பொருளாளராக கதிரேசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழக முதலமைச்சராக முதல்வராக பொறுப்பேற்றுக் ஸ்டாலின் மற்றும் அவரின் தலைமையில் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களுக்கும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சட்ட துறை அமைச்சராக ரகுபதி, விளையாட்டுத்துறை அமைச்சராக மெய்யநாதன் மற்றும் மாநிலங்களவை எம்பி அப்துல்லா ஆகியோரை நியமித்த தமிழக முதல்வரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலங்குடி தொகுதிகளில் புதிய கலை அறிவியல் கல்லூரி வழங்குவதற்கு அனுமதி தந்த முதலமைச்சருக்கு முயற்சி மேற்கொண்ட அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.காவிரி குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் டாஸ்மாக் மதுக்கடைகளை பள்ளிகள் கோவில்கள் மற்றும் பெண்கள் அதிகம் நடமாடும் மார்க்கெட் பகுதியில் இருந்து அகற்றப்படும் என தமிழக அரசு அறிவித்து இருப்பதற்கு புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழக சங்கம் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

48வது பொதுக்குழு கூட்டத்தை மாநில வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூடுதல் செயலாளர் சம்பத்குமார் தொகுத்து வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழக துணைத்தலைவர் முகமது அஸ்ரப் அலி நன்றியுரை ஆற்றினார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Updated On: 26 Sep 2021 10:49 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    முட்டை விலை 30 பைசா சரிவு; கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சி
  2. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  3. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  5. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  9. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  10. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா