/* */

மன நல சிகிச்சை மூலம் குணமான பெண் ஆட்சியர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

Handing over to the family healed female mental health treatment

HIGHLIGHTS

மன நல சிகிச்சை மூலம் குணமான பெண்  ஆட்சியர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
X

மனநலம் பாதிக்கப்பட்டவர் மன நல சிகிச்சை மூலம் மீட்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர் மன நல சிகிச்சை மூலம் மீட்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மாவட்ட மனநல மையத்தில், சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சங்கரி என்பவர் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் (15.06.2022) அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.இரண்டு மாதங்களுக்கு முன்பு 65 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சாலையில் இருந்து மீட்கபட்டு புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் இயங்கிவரும் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

மறதி நோய், குணநல மாறுபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, பார்வை குறைபாடு ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த மனநல மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்புரைக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பயனாளி மீண்டும் பார்வை பெற்றார்.இந்நிலையில் சங்கரி தனது குடும்பத்தினர் மற்றும் சொந்த ஊர் குறித்த தகவல்களை தெரிவித்ததைத் தொடர்ந்து, வருவாய்த்துறையினரின் உதவியுடன் அவரது குடும்பத்தினர் கடலூர் மாவட்டம், புவனகிரியில் வசிப்பது கண்டறியப்பட்டது.

சிகிச்சையின் பலனாக அவர் முழுமையாக குணமடைந்த தைத் தொடர்ந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையை தொடர அறிவுறுத்தி, சங்கரியை அவரது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அனுப்பி வைத்தார்.

கடந்த 6 மாதங்களாக சங்கரியை தேடி வந்த நிலையில், அவர் மீட்கப்பட்டு தங்களுடன் மீண்டும் சேர்த்து வைத்ததற்கு, அவரது குடும்பத்தினர் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட மனநல மருத்துவர் ரெ.கார்த்திக் தெய்வநாயகம் உடனிருந்தார்.

Updated On: 15 Jun 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  7. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  8. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...