/* */

அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) மாணவர் சேர்க்கை: ஜூலை 27 கடைசி தேதி

Government ITI Student Admission

HIGHLIGHTS

அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) மாணவர் சேர்க்கை: ஜூலை 27 கடைசி தேதி
X

புதுக்கோட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர்க்கைக்கு 20.07.2022 க்குள் விண்ணப்பிக்கலாம்.

2022- ஆம் ஆண்டில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக 24.06.2022 முதல் www.skilltraining.tn.gov. in இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மாணவர்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம் -1) வந்து நேரடியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

ஜுலை – 2022 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி. பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில்; உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன.

விண்ணப்ப கட்டணம் ரூ.50- ஐ கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்க் வாயிலாக செலுத்தலாம். மேலும் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகம், பஸ் பாஸ், வரைபடக் கருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.750- வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 20.07.2022 ஆகும்.

மேலும், விவரங்களுக்கு தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மைய கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அரசு தொழிற் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை 04322-221584இ 9486311243இ அரசு தொழிற் பயிற்சி நிலையம், விராலிமலை 9865447581இ உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், புதுக்கோட்டை, 9443184841 ஆகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Updated On: 29 Jun 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்