/* */

ரயில்வே பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு

நேற்று இரவு ரயில்வே சுரங்க பாதையை கடக்க முயன்ற போது தேங்கியிருந்த மழை நீரில் கார் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார்

HIGHLIGHTS

ரயில்வே பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு
X

புதுக்கோட்டை அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் மூழ்கிய அரசு மருத்துவரின் கார்.



புதுக்கோட்டை அருகே நேற்று இரவு ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழை நீரில் காரில் கடந்து செல்ல முயன்ற அரசு மருத்துவர் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார் மாமியார் மருத்துவமனையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் தொடையூரில் ஆளில்லா ரயில்வே கேட் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் ரயில்வே கேட்டை கடந்து செல்வதற்கு ரயில்வே நிர்வாகம் சுரங்க பாதை அமைந்துள்ளது.மழை பெய்யும் நேரங்களில் சுரங்கப்பாதையில் அதிக அளவில் மழை நீர் தேங்கி ஊர்மக்கள் ரயில்வே சுரங்கப்பாதை மூலமாக செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. சுரங்கப்பாதை அகற்றி மாற்றுப் பாதை அமைக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை அந்த பகுதி மக்கள் செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி முதல் கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக தொடையூர் ரயில்வே சுரங்கப்பாதையில் வழக்கம் போல் மழைநீர் அதிக அளவு தேங்கியிருந்தது. இந்நிலையில், ஓசூரில் அரசு மருத்துவராகப் பணியாற்றும் அந்த ஊரைச் சேர்ந்த மருத்துவர் சத்யா மற்றும் அவருடைய மாமியார் ஜெயம் ஆகியோர் காரில் சொந்த ஊரான தொடையூர் கிராமத்திற்கு வந்தனர்.

அவர்கள் நேற்று இரவு ரயில்வே சுரங்க பாதையை கடக்க முயன்ற போது அதிக அளவு தேங்கியிருந்த மழை நீரில் கார் மூழ்கியது. அவர்கள் காரை எடுக்க முயன்றும் அவர்களால் முடியவில்லை இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவரும் காரிலேயே மயங்கினர்

இதை அறிந்த அந்த பகுதி மக்கள் காரை உடைத்து இருவரையும் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் காரை ஓட்டி வந்த மருத்துவர் சத்யா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருடைய மாமியார் ஜெயம் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கி அரசு மருத்துவர் சத்தியா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனால் அந்த பகுதி மக்கள், ரயில்வே நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்த கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் காதர்மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கீதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தனர்.இச்சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Sep 2021 9:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  3. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  4. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  5. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  6. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  7. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  9. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  10. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!