/* */

புதுக்கோட்டையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதுக்கோட்டையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு திமுக உள்ளிட்ட கட்சியிர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
X

புதுக்கோட்டை போஸ் நகரிலுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு தி.மு.க. நகர செயலாளர் நைனா முகமது மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது.

அதேபோல் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இன்று மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எந்த ஒரு நிகழ்ச்சியும் இன்று ஊரடங்கு காரணமாக நடைபெறாது/ இந்த நிலையில் புதுக்கோட்டை நகர பகுதிகளில் போஸ் நகர் பகுதியில் மட்டும்தான் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலை உள்ளது. ஒவ்வொரு வருடமும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு போஸ் நகர் பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி சார்ந்த நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் போஸ் நகர் பகுதி பொதுமக்கள் என அனைவரும் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடி வருவார்கள்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக இன்று சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் 125வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்த்து வந்த நிலையில் புதுக்கோட்டை போஸ் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.

அதேபோல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதேபோல் தி.மு.க. நகர கழக செயலாளர் நைனா முகமது தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் போஸ் நகர் பகுதி பொதுமக்கள் என அனைவரும் ஊர்வலமாக வந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Updated On: 23 Jan 2022 6:13 AM GMT

Related News