/* */

பள்ளி மாணவ, மாணவிகள் 702 பேருக்கு இலவச சைக்கிள்: அமைச்சர் .மெய்யநாதன் வழங்கல்

ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார்

HIGHLIGHTS

பள்ளி மாணவ, மாணவிகள் 702  பேருக்கு  இலவச சைக்கிள்: அமைச்சர் .மெய்யநாதன் வழங்கல்
X

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 702 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 702 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 702 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (20.09.2022) வழங்கினார்.

அதன்படி ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 326 மாணவிகளுக்கும், மாஞ்சான்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 121 மாணவ, மாணவிகளுக்கும், அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 81 மாணவ, மாணவிகளுக்கும், வேங்கிடகுளம் தூயவளனார் மேல்நிலைப்பள்ளியில் 174 மாணவ, மாணவிகளுக்கும் என 702 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்கள் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி பயிலுவதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார்கள். மேலும் பெண் குழந்தைகள் கல்வி கற்பது குடும்பமே கல்வி கற்பதற்கு சமமாகும் என்ற உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தையும் தொடக்கி வைத்துள்ளார். இதன் மூலம் தந்தையாக மகளுக்கு செய்ய வேண்டிய கல்வி கற்பதற்கான சூழ்நிலையை முதலமைச்சர் ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயின்ட் கொபைன் நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மாணவிகள் தங்களது கலைதிறனை வெளிகொணரும் வகையில் அமைக்கப்பட உள்ளது. எனவே மாணவிகள் அனைவரும் அரசின் மூலம் செயல்படுத்தும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு கல்வியுடன் கூடிய சிறந்த பண்புகளை பெற்று நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

முன்னதாக ஆலங்குடி தேர்வுநிலைப் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.95.40 லட்சம் மதிப்பீட்டில் செட்டிகுளத்தில் 400 மீ நடைபாதை, 450 மீ கம்பிவேலி அமைத்தல், 400 மீ தடுப்புச்சுவர் அமைத்தல், 400 மீ சிமெண்ட் சிலாப் அமைத்தல், எல்.இ.டி விளக்கு அமைத்தல், அமரும் இருக்கை அமைத்தல், குளத்தைச் சுற்றி மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் மேம்பாட்டுப் பணிகளை பூமி பூஜை செய்து அமைச்சர் துவக்கி வைத்தார்.

மேலும், ஆலங்காட்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு கலையரங்கம் அமைக்கும் பணிகளையும், கலிங்கிப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.7 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளையும் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகள் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன், செயின்ட் கொபைன் நிறுவன மனித வள மேலாளர் புகழேந்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டார்.

Updated On: 20 Sep 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  3. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  4. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  5. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  6. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  7. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  8. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  9. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  10. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...