/* */

புதுக்கோட்டை வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் கொடியேற்றம்

முதன் முதலில் இக்கொடியை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்தவர் வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகளாவர்

HIGHLIGHTS

புதுக்கோட்டை வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் கொடியேற்றம்
X

புதுக்கோட்டை பல்லவன்குளம் அருகே அமைந்துள்ள வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் (ஐப்பசி-7) சன்மார்க்க கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்ற பக்தர்கள்

புதுக்கோட்டை பல்லவன்குளம் அருகே அமைந்துள்ள வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் (ஐப்பசி-7) சன்மார்க்க கொடி தினத்தையொட்டி( 24.10.2022 )சன்மார்க்க கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாத்தூர் வள்ளலார் மாணவர் இல்ல கௌரவ தலைவர் டாக்டர் ராம்தாஸ் பங்கேற்று சன்மார்க்க கொடியை ஏற்றி வைத்தார். மழையூர் சதாசிவம், பெரியநாயகி சன்மார்க்க கொடிபாடல் பாடினர்கள். இணைச்செயலாளர் திருநாவுக்கரசு ,பொருளாளர் முனியமுத்து, ஆவணம் ராஜேந்திரன், குளத்தூர் பரமசிவம், மற்றும் முத்துலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

சன்மார்க்க கொடிபற்றி… முதன் முதலில் இக்கொடியை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்தவர் வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகளாவர். வள்ளலார் கொடியைப் பற்றிச் சொன்னபோது மேல்புறம் மஞ்சள் என்றும் அடிப்பாகம் வெள்ளை என்றும் சொன்னார்.அதன் அளவுகளைச் சொல்லவில்லை என்றாலும் அந்தக் கொடி பிண்டத்தில் புருவமத்தியில்தான் முடிகிறது. ஆன்மாவும் புருவ மத்தியில்தான் உள்ளது.அந்த ஆன்மாவானது கால் பங்கு மஞ்சளும் முக்கால் பங்கு வெண்மையும் கலந்த நிறம் என்றார்.

இவர் மஞ்சள், வெள்ளை ஆகிய இருநிறங்கொண்ட கொடியை மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகை என்னும் இடத்தில் (வடலூருக்கு அருகே உள்ளது.) 22.10.1873 -ஆண்டு ஐப்பசித் திங்கள் 7 -ஆம் நாள் முதன் முதலாக இக்கொடியை அறிமுகம் செய்து பேருபதேசம் ஒன்றையும் செய்தருளினார்.சன்மார்க்கத்தின் முடிந்த முடிவான கொள்கைகளைக் கொண்ட அவ்வுபதேசம் மஹாபதேசம், பேருபதேசம் என வழங்கப்பெறுகிறது. அவ்வுபதேசத்தின் சிறுபகுதியை இங்கே காண்போம்.

இக்காலமே சன்மார்க்க காலம்: இதற்குச் சாட்சியாக இப்போது தான் சன்மார்க்க கொடி கட்டிக் கொண்டது. இக்கொடி உண்மையில் யாது எனில் நமது நாபி (கொப்புழ்) முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது. அந்த நாடி நுனியில் புருவ மத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது.

அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம், மேல்புறம் மஞ்சள் வர்ணம், அச்சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும், இறங்கவும் இருக்கின்றது. இக்கொடி நம் அனுபவத்தின் கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளி முகத்தில் அடையாள வர்ணமாகக் கொடி கட்டியது. இனி எல்லோருக்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும் என்றார் வள்ளலார்.

சுத்த சன்மார்க்க கொடி என்பது இதுபோல் ஓர் காலத்தில் ஏற்றி பின் இறக்குவது இல்லை என்றுமே ஏற்றியே இருக்கும். அக்கொடியின் உண்மை சுத்த சன்மார்க்க அனுபவத்தில் ஆன்ம அறிவில் விளங்கும்.அது எப்படி எனில் சன்மார்க்க அனுபவம் என்பது எப்பொழு தும் நம் மனதை புருவ மத்தியில் நிறுத்தி, நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் இறை உணர்வு கலந்து, உயிர்கள் அனைத்தையும் தன் உயிர்போல் நேசிக்கும் குணத்தைப் பெற்று, நமது ஒவ்வொரு செயலிலும் இரக்கத்தையும் பொது நோக்கையும் வெளிப்படுத்திய வண்ணம் வாழ்ந்து வருவதே சன்மார்க்க வாழ்வு பெற அனுபவ முறை யாகும். இவ்வாழ்வைப் பெற்றவர்களுக்கு இக்கொடியின் உண்மை நன்கு விளங்கும் என பக்தர்கள் கூறுகின்றனர்.

Updated On: 25 Oct 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  4. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  5. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  7. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  10. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!