/* */

ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி

ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து மாவட்டத்திற்குள்பட்ட விவசாயிகளுக் கான பயிற்சி மூக்கம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது

HIGHLIGHTS

ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி
X

ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய விவசாயிகள் பயிற்சி

புதுக்கோட்டை வட்டாரம் வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி மூக்கம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் செல்வி துவக்கி வைத்தார். வேளாண்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானிய விவரங்கள் மற்றும் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார். நிலக்கடலை சாகுபடி மற்றும் சிறுதானிய சாகுபடி முறைகள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் - மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் லூர்து ரீட்டா அவர்கள் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் மற்றும் நாட்டுக்கோழிகுஞ்சுகள் மானியத்தில் விநியோகம் ஆகியவற்றை எடுத்துக் கூறி அதில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறுமாறு கூறினார். உதவி பேராசிரியர் இளவரசன் அவர்கள் கறவைமாடுகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள், கன்று குட்டிகளை பராமரிக்கும் முறைகள் மற்றும் வெள்ளாடு வளர்க்கும் முறைகளை பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். விவசாயிகள் கறவைமாடுகள், கன்றுகுட்டிகள் பராமரிப்ப மற்றும் பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு ஆகியவற்றை பார்வையிட்டனர். பயிற்சியின் முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தஜோதி நன்றி கூறினார்.

இப்பிற்சியில் மூக்கம்பட்டி கிராமத்ததை சார்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கமலி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் உமா மகேஸ்வரி, சக்திவேல் செய்திருந்தனர்;. இவ்வாறு புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி தமது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த பண்ணையம்..

தற்போது தமிழகத்தில் விவசாயம் செய்யப்பட்டு வரும் சுமார் 5.58 மில்லியன் எக்டேர் நிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட நிலம், அதாவது சுமார் 2.31 மில்லியன் எக்டேர் நிலமானது தரிசு நிலமாக அல்லது வானம் பார்த்த மானாவாரி நிலமாகவே உள்ளது. குறைந்த அல்லது நீர் ஆதாரம் இல்லாத, வளம் குறைந்த மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் பயிர் செய்வதன் மூலம் உழவர் பெருமக்கள் வருடம் முழுவதும் நிரந்தர வருவாய் பெற முடியாமல் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகுகிறார்கள். அவர்களின் துயர் துடைக்க, நிரந்தர வருவாய் பெற்று தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய மற்றும் மாநில அரசாங்கமானது பல திட்டங்களை வகுத்து செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

இத்தருணத்த்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் என்றால் என்ன? அவற்றை எவ்வாறு செயல்படுத்த வேண்டும். குறிப்பாக மானாவாரி மற்றும் தரிசு நிலங்களுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் எவ்வாறு என்பதை நன்கு அறிந்து கொள்ளுதல் மிக அவசியமாகும். ஒருங்கிணைந்த பண்ணையம் என்றால் என்ன? என்பதைப் பார்ப்போம். ஒருங்கிணைந்த பண்ணையம் என்றால் விவசாயத்தில் ஒரு பண்ணையத்தொழிலை மட்டும் மேற்கொள்ளாமல், ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இரண்டு அதற்கு மேற்பட்ட பண்ணைத் தொழில்களை கூட்டாக மேற்கொள்ளுதலே ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகும். இதனுடைய சிறப்பு என்னவென்றால் ஒரு பண்ணைத் தொழிலின் கழிவுப்பொருள் மற்றொரு பண்ணைத்தொழிலுக்கு இடுபொருளாக மாறுவதால், ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருக்கின்ற நீர் வளத்தை சிறப்பாகப் பயன்படுத்தி அதிக லாபம் பெற்று வருடம் முழுவதும் வருவாய் கிடைக்க ஏதுவாகிறது.

இந்தியாவைப் பொருத்தமட்டில் அதிக எண்ணிக்கையலான கறவை மாடுகள் மட்டுமல்லாது, வெள்ளாடுகள், செம்மறியாடுகள், பன்றிகள் மற்றும் கோழிகள் உள்ளன.வேளாண்மையும், கால்நடை வளர்ப்பையும் முதன்மையாகக் கொண்டுள்ள நம் நாட்டில் 100 கோடிக்கும் மேற்பட்ட அளவில் விலங்கின மற்றும் தாவர கழிவுகள் ஆண்டுதோறும் கிடைக்கிறது.விவசாயிகளின் நிலப்பரப்பு, நீர்ப்பாசன வசதி, வடிகால் வசதி மற்றும் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து பல்வேறு மானாவாரி அல்லது தரிசு நிலப்பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணை மாதிரிகள் தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளன.



Updated On: 6 Dec 2022 6:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  5. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  10. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?