/* */

புதுக்கோட்டையில் அகழ்வராய்ச்சி: முதல் கட்ட பணி வரும் 30-ஆம் தேதியுடன் நிறைவு

புதுக்கோட்டை அருகே பொற்பனைக் கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் பண்டைய கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் முதல்கட்ட அகழ்வராய்ச்சி பணி வரும் 30 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் பண்டை கால நாகரிகத்தை பறைசாற்றும் பல்வேறு விதமான மணிகள் நவரத்தினக் கற்கள் பானை ஓடுகள் பல்வேறு விதமான எலும்புத்துண்டுகள், சட்டிகள் பானைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது இவை எத்தகைய நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது ஆய்வுக்கு பின்னர் தெரிய வரும்.புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் கடந்த இரண்டு மாத காலமாக அகழ்வாராய்ச்சி பணி, தமிழக தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலமாக நடைபெற்று வருகிறது. அகழ்வாராய்ச்சி பணி சுமார் 15 அடிக்கும் ஆழத்துக்குக் கீழ் வரை அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், இன்று நடைபெற்ற அகழாய்வின்போது மண்ணுக்குள் புதையுண்டு இருந்த பண்டை காலத்து நாகரிகத்தை பறைசாற்றும் மண் சட்டிகள் பானைகள் ஆகியவை உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இவை எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது குறித்து ஆய்வுக்கு பின்னர் தெரிய வரும்.

மேலும், தமிழக அரசு உத்தரவுப்படி முதல் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் வரும் 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 24 Sep 2021 5:49 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?