யாருக்கு வேலை இல்லை...! தகுதிதான் கேள்விக்குறி...?

நாம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பிறகும் பேசத் தயங்கித் தயங்கியே இளைஞர்கள் வாழ்க்கையை இழந்து விட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
யாருக்கு வேலை இல்லை...! தகுதிதான் கேள்விக்குறி...?
X

யாருக்கு வேலை இல்லை...! தகுதிதான் கேள்விக்குறி...?

படித்துவிட்டோம் ஏன் வேலை கிடைக்கவில்லை...? என்ற குமுறல் கூக்குரலாக ஒலித்துக் கொண்டிருப்பதை கேட்கிறோம். இதற்கு தன்னம்பிக்கை மற்றும் ஆளுமைத்திறன், மொழிப்புலமை ஆகிய மூன்றிலும் அக்கறை செலுத்தாமல் இருந்ததுதான் இதற்கு அடிப்படை காரணம். மேலும், மாணவ பருவத்தில் பத்திரிக்கைகளை வாசிக்கும் பழக்கமின்மையால் நாட்டு நடப்பு தெரியாத தலைமுறை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தலைமுறையினருக்கு இணைய தளம் மூலம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. ஆனால், இணைய தளத்தில் வெளியாகும் தகவல் அனைத்துமே நம்பகத்தன்மையுடையவை அல்ல என்பதும், அதில் சுமார் பத்து சதவீதத் தகவல்களை மட்டுமே நம்பலாம் என்ற உண்மையை உணராதவர்களாக இருப்பது வேதனைக்குரியது.

இந்நிலையில், மாணவர்களின் தோல்விக்கு முக்கிய காரணி அவர்களது தாய் மொழியை சரளமாகப் பேசத்தெரியாமல் இருப்பது. இதே நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் ஆங்கில மொழிக்கு சிறப்பு பயிற்சி மையங்கள் தொடங்கப்படுவதைப் போல தமிழ் பேசவும், படிக்கவும் பயிற்சி மையங்கள் தோற்றுவிக்கும் நிலை உருவாகும். மாணவனின் முதல் கட்டத் தோல்வி மொழியில் இருந்தே தொடங்குகிறது. உலக நாடுகள் சுதந்திரக்காற்றை சுவாசிப்பதற்கு அடிப்படைக்காரணம் பேச்சுரிமைதான். ஆனால், நாம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பிறகும் பேசத் தயங்கித் தயங்கியே இளைஞர்கள் வாழ்க்கையை இழந்து விட்டனர். வெட்டிப்பேச்சு, வீண் விவாதங்களில் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை இன்றும் நீரூபித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதைப் புறந்தள்ளி ஆக்கப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் பேசும் போக்கில் இளைஞர்கள் செல்வார்களேயானால்,

இவர்கள் எவரிடமும் வேலை கேட்டு நிற்க வேண்டிய நிலை வராது. இதை உணராமல், படித்து விட்டேன், எனக்கு அரசாங்கம் வேலை தரவேண்டும் என்ற பிற்போக்குத்தனத்துடன் வெட்டியாக பொழுதைக் கழிப்பது சுய முன்னேற்றத்தும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் எப்படி உதவும்?. ஆளுமைத்திறன் இருந்தால் பணம் சம்பாதிக்க முடியும், பணம் சம்பாதித்தால்தான் மனிதனை சம்பாதிக்கமுடியும் என்ற சூழல் வந்து விட்டது என்பது உலகறிந்த உண்மை. இத்தகு சூழலில், ஆளுமைத்திறன் வளர்த்தலில் இன்றைய இளைஞர் சமுதாயம் அக்கறை செலுத்த வேண்டும். தாய் மொழி, தேசிய மொழி, பன்னாட்டு மொழி எனும் மும்மொழியிலும் புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது புலம் பெயர்ந்து செல்லும் அனைவருக்கும் அடிப்படையானது, அவசியமானது. ஆனால், எத்தனை இளைஞர்கள் படிக்கும் காலத்தில் இதில் கவனம் செலுத்துகின்றனர் என்ற கேள்விக்கு, இல்லை என்ற பதிலை கூனிக்குறுகி கூறும் நிலை உள்ளது.

ஒரு முதுகலைப்பட்டம் பெற்றவருக்கு தான் வாங்கிய பட்டத்தில் எழுதியுள்ள வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பதே தெரியாமல் இருகிறார் என்பது கசப்பான உண்மை. புதுக்கோட்டையில் இயங்கி வரும் ஆங்கிலப்பயிற்சி நிறுவனம் தமிழகம் முழுதும் உள்ள தனது பயிற்சி மையங்களுக்குத் தேவையான ஆசிரியர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு, ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்கள் உள்பட சுமார் 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களை நேர்காணல் செய்தபேது , அதில் தேர்வானவர்கள் 2 பேர் மட்டுமே என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். வறுமையால் படிக்க இயலாத சூழலில் எந்த வேலையும் செய்யலாம் என்ற சூழல் இருந்தது. ஆனால், இன்று உலகமே உள்ளங்கைக்குள் வந்து விட்ட நிலையில், ஆசிரியர் பட்டதாரிகள், முதுகலைப்பட்டம் பெற்றவர்கள் மதுபானக்கடைகளில் பணிக்குச்செல்வது அவர்கள் தகுதியை அவர்களே தாழ்த்திக் கொள்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.

நமது பள்ளிகளில் பாடங்கள் மட்டுமே போதிப்பது, தன்னம்பிக்கை, ஆளுமைத்திறன், உலக விஷயங்களை போதிக்காததே இதற்கெல்லாம் அடிப்படை காரணம். அக்காலத்தில் இருந்ததைப் போல நீதி போதனை வகுப்புகளை பள்ளிகளை மீண்டும் தொடங்க வேண்டும். அதில் கூறப்படும் நீதிக்கதைகளை கேட்காமல் ஒரு சமூகம் உருவாகிவி்ட்டதால், நேர்மை, நியாயம், நீதி, மனசாட்சி என்றால் என்ன விலை என கேட்பதுடன் குறுக்கு வழியில் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் நிலை அதிகரித்துள்ளது.

இதற்கான விதை பள்ளிகளில் விதைக்கப்படுவதை தடுத்து பொது அறிவை வளர்க்கும் போக்கு அதிகரிக்க வேண்டும். தினமும் நாளிதழ்கள், வார இதழ்களை படித்தால் அதில் உள்ள நான்கு நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். இதற்கான களமாக நூலகங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் அறிவுத்திறனுடன் ஆளுமைத்திறனையும் பெற முடியும். இந்தத் தகுதிகளை வளர்த்துக் கொண்டால்...! யாருக்கும் வேலை இல்லை என்ற கேள்விக்கு இடமே இல்லாமல் போகும் அல்லவா.

Updated On: 21 Sep 2021 4:52 AM GMT

Related News