/* */

வேலாடிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்-மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அறிவுரைப்படி முகாம் நடத்தப்பட்டது

HIGHLIGHTS

வேலாடிப்பட்டி  அரசு உயர்நிலை பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்
X

புதுக்கோட்டை அருகே வேலாடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் பேசிய மதுவிலக்குக பிரிவு உதவி ஆய்வாளர் துர்காதேவி

வேலாடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் அறிவுரை பேரில் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பிரசார முகாம்கள் நடத்தப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை அருகே வேலாடிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில், புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் துர்காதேவி கலந்து கொண்டு பேசினார்.

மாணவர்களுக்கு போதை பொருள் சார்ந்த தீமைகள் மற்றும் போலி மதுபானம் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வதை தடுக்கவும் கள்ளச்சாரயம் தடுப்பு சம்பந்தப்பட்ட தகவல்களை 10581 என்ற இலவச எண்ணிற்கு தெரிவிப்பது பற்றி மாணவர் களுக்கு விளக்கமளித்து, விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கினார். மேலும் மாணவர்கள் நல்ல பழக்க வழக்கங்க ளை கடைப்பிடித்து நன்றாக படித்து சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.

நிகழ்வில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஜிலா ஜாய் தலைமை வகித்தார். ஆசிரியர் கணேசன் வரவேற்றார். நிறைவாக ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார். நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர். ‌


Updated On: 13 May 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  2. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  3. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  7. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  10. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு