/* */

சாலை ஓரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய திமுக எம்எல்ஏ

ஊரடங்கால் சாலை ஓரங்களில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் உணவு கிடைக்காமல் பரிதவித்து வந்தனர்

HIGHLIGHTS

சாலை ஓரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு  வழங்கிய  திமுக எம்எல்ஏ
X

 முழு ஊரடங்கு முன்னிட்டு புதுக்கோட்டையில் உணவின்றி தவித்து வந்த முதியவர்கள் மற்றும் பொது மக்களுக்கு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்து ராஜா உணவு பொட்டலங்களை வழங்கினார்

புதுக்கோட்டையில் சாலையோரங்களில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா இன்று உணவு பொட்டலங்களை வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனாவின் மூன்றாவது அலையான ஒழிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது.இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டுடன் கூடிய விதிமுறைகளை அமல்படுத்தி இரவு நேர ஊரடங்கு உத்தரவையும் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு ஹோட்டல்கள் மூடப்பட்டு இருப்பதாலும் சிறிய ஹோட்டல்களில் பார்சல் மட்டுமே பொதுமக்கள் வாங்கிச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் சாலை ஓரங்களில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் உணவு கிடைக்காமல் பரிதவித்து வந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, உணவு தயார் செய்து பொட்டலங்களாக தயாரித்து, சாலையோரத்தில் உணவின்றி தவித்து வந்த முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் க. நைனா முகமது மற்றும் திமுக நிர்வாகிகள் மணிமொழி மனோகரன், பாலகிருஷ்ணன், சையது முகம்மது, கமல் சுதாகர், புவனேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Jan 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...