/* */

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றிய 9 அலுவலர்கள் பணியிடை நீக்கம்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றிய 9 அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடவடிக்கை.

HIGHLIGHTS

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றிய  9 அலுவலர்கள் பணியிடை நீக்கம்
X

நெல் கொள்முதல் நிலையம் 

வழக்கத்தைவிட இந்த ஆண்டு கோடை சாகுபடிக்கான நெல் கொள்முதல் அளவு அதிகமாக இருந்த நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இணை இயக்குனர் சங்கீதா தலைமையிலான அதிகாரிகள் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நெல் கொள்முதலுக்காக கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளுக்கான விஏஓ வழங்கக்கூடய சிட்டா அடங்கல் உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக இல்லை என்றும், முறையான ஆவணங்களைப் பெற்று நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும் போலியான ஆவணங்கள் மூலம் சில வியாபாரிகளின் நெல் மூட்டைகளும் விவசாயிகளின் நெல் மூட்டையோடு சேர்த்து குவித்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதால் சம்பந்தப்பட்ட நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றி வந்த 5 பட்டியல் எழுத்தர்கள், 3 கொள்முதல் நிலைய அலுவலர்கள், 1 காவலர் உள்ளிட்ட 9 பேர் பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளது.


Updated On: 23 July 2021 5:15 AM GMT

Related News