விபத்தில் சிக்கியவருக்கு ர் ஊசி போட்டதால் உயிரிழந்த சம்பவம் : உறவினர்கள் முற்றுகை

மருத்துவமனை ஊழியர்கள் இன்று காலை அவருக்கு ஊசி ஒன்றை செலுத்தியுள்ளனர் இதனை தொடர்ந்து ஐந்து நிமிடத்தில் அவர் உயிரிழந்தார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
விபத்தில் சிக்கியவருக்கு ர் ஊசி போட்டதால் உயிரிழந்த சம்பவம் : உறவினர்கள் முற்றுகை
X

தவறான ஊசி செலுத்தியதால் உயிரிழந்ததாகக்கூறி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நோயாளியின் உறவினர்கள்

தவறான ஊசி செலுத்தியதால் நோயாளி உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் புதுக்கோட்டைஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு.

புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(23). இவர் நேற்று மாலை கந்தர்வக்கோட்டை அருகே உள்ள சோலகம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார் அப்போது அவர் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது இதில் பலத்த காயமடைந்த முருகேசன் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குடல் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர் இதை தொடர்ந்து அவரது உறவினர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்கு சம்மதம் தெரிவித்து, நேற்று இரவு முருகேசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் இன்று காலை வரைஅனைவரிடமும் பேசிக்கொண்டு இருந்தாராம். இந்நிலையில், இன்று காலை 9 மணி அளவில் மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் மற்றும் செவிலியர்கள் முருகேசனுக்கு ஊசி ஒன்றை செலுத்தியுள்ளனர்.ஊசி செலுத்திய ஐந்து நிமிடத்தில் முருகேசன் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.

பயிற்சி மருத்துவர் மற்றும் செவிலியர்கள் தவறான ஊசி செலுத்தியதால்தான் முருகேசன் உயிரிழந்துள்ளார் என்று கூறி 200க்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு சிலர் மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் முருகேசனின் உடலை பிரேத பரிசோதனை அறைக்கு எடுத்துச் செல்ல விடாமல் உள்நோயாளிகள் பிரிவு வாசலிலேயே அவரது உடலை வைத்து உறவினர்கள் தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தவறான ஊசி செலுத்திய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 26 Jan 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே...
  2. தமிழ்நாடு
    மியூசிக் அகாடமி சங்கீத கலாநிதி விருதுகள் அறிவிப்பு
  3. சாத்தூர்
    சாத்தூர் அருகே நாய் கடித்து மான் பலியானது
  4. திருநெல்வேலி
    கல்குவாரி விபத்தில் பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த 6 வது நபரின் சடலம் ...
  5. ஈரோடு மாநகரம்
    முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேரறிவாளன் சந்திப்பு
  6. பெருந்துறை
    கால்வாய் கான்கிரீட் திட்டத்தை எதிர்த்து கீழ்பவானி பாசன விவசாயிகள்...
  7. குமாரபாளையம்
    மாநில தலைவர் வெள்ளிவிழா ஆண்டையொட்டி பா.ம.க. சார்பில் கொடியேற்று விழா
  8. சினிமா
    ஜூலையில் மீண்டும் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி - கமல் வருவாரா?
  9. தமிழ்நாடு
    பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டுமா?: அமைச்சர்...
  10. தொண்டாமுத்தூர்
    பூண்டி வெள்ளிங்கிரி மலையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு