/* */

புதுக்கோட்டை நகரில் குண்டும் குழியுமாக சாலைகள்: வாகன ஓட்டிகள் அவதி

நகராட்சி நிர்வாகம் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளுக்கு தார்க் கலவை மூலம் நிரந்தர தீர்வுகாண வேண்டும்

HIGHLIGHTS

புதுக்கோட்டை நகரில் குண்டும் குழியுமாக சாலைகள்: வாகன ஓட்டிகள் அவதி
X

புதுக்கோட்டை எம்ஜிஆர் சிலை அருகே குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் தார் சாலைகள்

புதுக்கோட்டை நகர பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையப்பகுதியில் உள்ள சாலையில் அதிக அளவில் குண்டும் குழியுமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் பலர் பள்ளங்களில் தவறி விழுந்து காயமடையும் ஆபத்து தொடர்கிறது. நகராட்சி நிர்வாகம் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளுக்கு தார்க் கலவை மூலம் நிரந்தர தீர்வுகாண்பதை விட்டுவிட்டு, அந்தக் குழிகளில் தற்காலிகமாக மணலை போட்டு மூடுவதால், வாகனங்கள் செல்லும்போது மீண்டும் பள்ளங்களாக மாறிவிடும் அவலம் தொடர்கிறது.

நகராட்சி நிர்வாகம் புதுக்கோட்டை நகர பகுதிகளில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல் புதுக்கோட்டை நகராட்சிகளில் பல்வேறு இடங்களில் புதைசாக்கடைத் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட மனிததுளைக்கான மூடிகள் சரியாக மூடாமல் இருப்பதால், வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்கவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலைகளின் வழியாகத்தான் மாவட்ட ஆட்சியர் உள்பட அரசு அதிகாரிகள் பலர் வாகனங்களில் அலுவலகத்துக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


Updated On: 19 Sep 2021 6:47 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?