/* */

உசிலங்குளம் மக்களின் அடிப்படை வசதி கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

உசிலங்குளம் சத்தியமூர்த்தி நகர், கே.எல்.கே.எஸ் நகர் பகுதி மக்களின் அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது

HIGHLIGHTS

உசிலங்குளம் மக்களின் அடிப்படை வசதி கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டை உசிலங்குளத்தில் அடிப்படை வசதிகோரி பொதுமக்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  சிபிஎம் கட்சியினர்.

உசிலங்குளம் மக்களின் அடிப்படை வசதி கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட உசிலங்குளம் சத்தியமூர்த்தி நகர், கே.எல்.கே.எஸ் நகர் பகுதி மக்களின் அடிப்படை வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், உசிலங்குளம் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு உசிலங்குளம்,கிளைச் செயலாளர் ஏ.டேவிட் தலைமை வகித்தார் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜனார்த்தனன், நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். நகரக்குழு உறுப்பினர்கள் சி.அடைக்கலசாமி, எஸ்.பாண்டியன், பழ.குமரேசன், ஏ.முத்தையா, எம்.ஏ.ரகுமான் ஆர்.நிரஞ்சனாதேவி உள்ளிட்டோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் உசிலங்குளம், சத்தியமூர்த்தி நகர் பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை முறையாக விநியோகம் செய்ய வேண்டும். பாதாள சாக்கடையில் கழிவு நீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உசகலங்குளம் 8-ஆம் வீதியில் தெருவிளக்கு அமைத்து தர வேண்டும். உசிலங்குளத்தில் ரேசன் கடைக்கு ஒரு நிரந்தரமான இடத்தை தேர்வு செய்து கட்டிடம் கண்டித்து வேண்டும். கே.எல்.கே .எஸ் நகரில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பூங்கா அமைத்து தரவேண்டும். மழைநீர் தேங்காாமல் வரத்து வாரிகளை சரிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

ஆங்கிலேயர் காலத்தில் தனி சமஸ்தான அந்தஸ்துடன் திகழ்ந்த பெருமையுடையது புதுக்கோட்டை. கடந்த 1912 -ம் ஆண்டு அப்போதைய சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை நகராட்சி உருவானது. சமஸ்தானத்தில் உருவான ஒரே நகராட்சியும் இதுதான். அப்போது நகரசபைக்கு 18 உறுப்பினர்கள் இருந்தனர்.

தொடக்ககாலத்தில் மூன்றாம் நிலை நகராட்சியாக இருந்த நிலையில், 1949 -ல் இரண்டாம் நிலைக்கும், 1963 -ல் முதல் நிலை நகராட்சியாகவும், 23.3.1988 -ல் தேர்வு நிலை நகராட்சியாகவும் படிப்படியாக தரம் உயர்ந்தது. இதில் தற்போது 42 நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

கடந்த 2012 -ல் நடைபெற்ற நகராட்சி நூற்றாண்டு விழா நிதி ரூ. 50 கோடியில் ரூ. 19.42 கோடியில் 55 கிமீ தொலைவுக்கு தார்ச்சாலை அமைத்தல், ரூ.5.57 கோடியில் 12 கிமீ சிமெண்ட் சாலைகள் அமைத்தல், ரூ.5.23 கோடியில் காவிரி கூட்டுக்குடி நீர்த்திட்டத்தில் மின்மோட்டார்கள் மாற்றியமைத்தல், ரூ.2.34 கோடியில் அம்மையாபட்டி குடிநீர் நீரேற்று நிலையத்தில் 4 கிமீ பிரதான குழாயை மாற்றி அமைத்தல், ரூ.6.40 கோடியில் 5 இடங்களில் உயர்மின் கோபுரம் அமைத்தல், ரூ. 5 கோடி்யில் நகராட்சி நிர்வாகத்துக்கு புதிய அலுவலகம் கட்டுதல், ரூ. 55 லட்சத்தில் நுழைவு வாயில் மற்றும் நினைவுத்தூண் அமைத்தல், ரூ. 40 லட்சத்தில் நகரின் பிரதான சாலைகளில் எல்இடி விளக்குகள் அமைத்தல், ரூ. 1.17 கோடியில் புதிய பேருந்து நிலையத்தில் சிமெண்ட் தளம் அமைத்தல். ரூ. 25 லட்சத்தில் நகர் மன்ற புராதனக் கட்டிடம் சீரமைத்தல், ரூ. 37 லட்சத்தில் காந்தி பூங்காவும், ரூ. 38 லட்சத்தில் பெரியார் நகர் பூங்காவும், ரூ. 50 லட்சத்தில் புதுக்குளம் பூங்காவும் சீரமைத்தல், ரூ.4.67 கோடியில் மழை நீர் வடிகால் அமைத்தல், ரூ.87 லட்சத்தில் 7 இடங்களில் புதிய நவீன கழிப்பிடமும், ரூ.96 லட்சத்தில் பழை கழிப்பறைகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பத்தாண்டுகள் கடந்த பின்னர் தற்போது பல்வேறு வார்டுகளில் அடிப்படை வசதிகளை செய்து தரவலியுறுத்து பொதுமக்கள் சார்பில் கோரிக்கைகளும் அவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படு வருகின்றன.

Updated On: 6 Dec 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!