/* */

வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சியினர் காத்திருப்புப் போராட்டம்

குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடந்தது

HIGHLIGHTS

வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சியினர் காத்திருப்புப் போராட்டம்
X

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை காத்திருக்கும் பேராட்டம் நடைபெற்றது.

எந்தவித முன்னறிவிப்பும், கால அவகாசமும் கொடுக்காமல் 24 மணி நேரத்திற்குள் சுற்றுச்சுவரை இடிக்க கெடுவிதித்த வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினரைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை காத்திருக்கும் பேராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்டது மேலூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த வி.ரெங்கசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் ஏற்கெனவே, நில அளவைத்துறையினர் மூலம் நில அளவை செய்து தனது வீட்டைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், மேற்படி சுவர் அரசுப் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வருவாயத்துறையினருக்கு சிலர் புகார் தெரிவித்துள்ளனர். அதன் படி எந்தவித முன்னறிவிப்பும், கால அவகாசமும் கொடுக்காமல் 24 மணி நேரத்திற்குள் சுற்றுச்சுவரை அகற்ற வேண்டுமென வருவாயத்துறையினர் மற்றும் காவல்துறையின் சார்பில் ரெங்கசாமி வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

வருவாய்த்துறையினரின் இத்தகைய அராஜகப் போக்கைக் கண்டித்து குளத்தூர் வட்டாட்சியர் அலுவலம் முன்பாக நடைபெற்ற காத்திருக்கும் பேராட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் டி.ரகுபதி, எம்.நாகராஜ், ஆர்.லெட்சுசமணன் ஆகியோர் முன்னலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்;.சி.ரெங்கசாமி, ஏ.தேவராஜன் உள்ளிட்டோர் பேசினர்.

Updated On: 2 Dec 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?