/* */

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர சிபிஎம் கட்சி வலியுறுத்தல்

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தனியாரிடம் இருந்து 1999-ல் 1.30 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர சிபிஎம் கட்சி வலியுறுத்தல்
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி தாலுகாவில் உள்ள புதுவலசல் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தை தனியாரிடமிருந்து மீட்டுத் தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய பேரவைக் கூட்டம் மழையூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ஆர்.காமராஜ் தலைமை வகித்தார். பேரவையில் கலந்து கொண்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன் ஆகியோர் உரையாற்றினர்.பேரவையில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கறம்பக்குடி தாலுகா பல்லவராயன் பத்தை ஊராட்சிக்கு உட்பட்டது புதுவலசல் கிராமம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் இன குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தனியாரிடம் இருந்து 1999-ல் 1.30 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. பின்னர் அந்த நில உரிமையாளர் நிலத்துக்கான தொகையை வாங்க மறுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து மேற்கண்ட நிலத்துக்கான தொகை கருவூலம் மூலம் ஆதிதிராவிடர் நலத்துறையால் செலுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்படி நிலத்தை விற்றவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்து வந்த உயர் நீதிமன்றம் 03.04.2008-ல் வழங்கிய தீர்ப்பில் மேற்படி நிலம் ஆதிதிராவிடர் நலத்துறைக்கே சொந்தமானது எனத் தீர்ப்பளித்தது. ஆனால், இதுநாள்வரை மேற்படி நிலத்தை வருவாய்த்துறையினர் கையகப்படுத்தி ஒப்படைக்கவில்லை. இதற்கு இடையே மேற்படி நபர் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு விற்றதை மறைந்து போலியாக ஆவணங்களைத் தயாரித்து சமவேறு, வேறு நபர்களுக்கு கைமாற்றி உள்ளார்.

வருவாய்த்துறையினரின் மேற்படி அலட்சியப் போக்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறது. உடனடியாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு மேற்படி நிலத்தை கையகப்படுத்தி ஆதிதிராவிடர் நலத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், அந்த நிலத்தில் அந்தப் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மக்களில் தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு மனைப்பட்டாவாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

நில மோசடி, நில அபகரிப்பு ஆகியவற்றில் இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி)பிரிவு 120 பி (குற்றச்சதி), பிரிவுகள் 405, 406 (நம்பிக்கை மோசடி), பிரிவுகள் 441, 447 (குற்ற ஆக்கிரமிப்பு), பிரிவுகள் 465, 466, 468 (ஃபோர்ஜரி) பிரிவுகள் 472, 473, 474, 475, 476 (போலி உருவாக்கல்), 416, 419 (ஆள்மாறாட்டம்), பதிவுச்சட்டம் பிரிவு 81, 82, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் முதலில் காவல் நிலையத்தில் புகார் செய்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகாரை சமர்ப்பித்து வழக்கு தொடர்ந்தால் அவர் அதை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அருகில் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைப்பார்.

Updated On: 24 Nov 2022 11:45 AM GMT

Related News