/* */

புதுக்கோட்டையில் வாயில் துணியைக் கட்டி காங்கிரசார் போராட்டம்

புதுக்கோட்டையில் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வாயில் துணியைக் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் வாயில் துணியைக் கட்டி காங்கிரசார் போராட்டம்
X

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே பேரறிவாளன் விடுதலை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வாயில் துணியை கட்டிக்கொண்டு மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளனை 30 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து இருந்தாலும், காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் நிர்வாகிகள் வாயில் துணி கட்டிக் கொண்டு மௌன போராட்டத்தில் ஈடுபடுவார் என அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று பேரறிவாளனின் விடுதலையை கண்டித்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வாயில் துணியை கட்டிக் கொண்டு மௌனப். போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 May 2022 5:48 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  2. சினிமா
    Thalaivar 171 Title இதுவா? என்னங்க சொல்றீங்க!
  3. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  5. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  6. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  7. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  9. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  10. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு