/* */

அன்னவாசல் பேரூராட்சி தலைவர் தேர்தலில் மோதல்: போலீஸ் தடியடி

அன்னவாசலில் இன்று நடந்த பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் மோதல். போலீஸ் தடியடி.

HIGHLIGHTS

அன்னவாசல் பேரூராட்சி தலைவர் தேர்தலில் மோதல்: போலீஸ் தடியடி
X

அன்னவாசலில் பேரூராட்சி தேர்தலில் மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.

புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளரான சாலை பொன்னம்மாள் அன்னவாசல் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற திமுக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில் இன்று அன்னவாசல் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது இந்த தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த சாலை பொன்னம்மாள் அன்னவாசல் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக வேட்பாளரை அதிமுகவினர் கடத்தி விட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்னவாசல் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுகவைச் சேர்ந்த சாலை பொன்னம்மாள் வெற்றி செல்லாது என்றும் கூறி திமுகவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் சுற்றுச் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைய முயற்சித்தனர்.

இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் அன்னவாசல் ஒன்றிய செயலாளர் சந்திரன் மற்றும் நிர்வாகிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த வாக்குவாதத்தில் சிலர் கற்களை எடுத்து போலீசாரையும் அதிமுகவினரையும் தாக்கியதாக கூறப்படுகிறது இதில் பலர் காயமடைந்தனர். இதை அடுத்து கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் அப்பகுதியில் திரண்டிருந்த திமுகவினரை தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர் இதனால் அன்னவாசல் பேரூராட்சி அலுவலகம் முன்பு போர்க்களம் போல் காட்சி அளித்தது.

மேலும் அப்பகுதியில் இரு தரப்பு மோதலை தவிர்ப்பதற்காக போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர் இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அன்னவாசல் பேரூராட்சியில் அதிமுக - 8, இடங்களிலும் திமுக - 6 இடங்களிலும் ஒரு சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.

Updated On: 4 March 2022 7:44 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  5. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  6. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  7. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  8. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  9. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  10. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...