/* */

புதுக்கோட்டையில் ஒரு கட்டு கரும்பு ரூ 500 முதல் 800 வரை விற்பனை: மக்கள் அதிர்ச்சி

பொங்கல் பானை வைக்கும்போது கரும்பு வைத்து வழிபடுவது வழக்கம்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் ஒரு கட்டு கரும்பு ரூ 500 முதல் 800 வரை விற்பனை: மக்கள் அதிர்ச்சி
X

புதுக்கோட்டை  திலகர்திடலில் விற்பனை செய்யப்பட்ட கரும்பு

புதுக்கோட்டையில் பொங்கல் பண்டிகைக்கு ஒரு கட்டு கரும்பு ரூ 500 முதல் 800 வரை விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது கரும்பு. பொங்கல் பானை வைக்கும்போது கரும்பு வைத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அரிசி வாங்கும் ரேஷன் தாரர்களுக்கு பொங்கல் பரிசு கரும்பும் சேர்த்து வழங்கப்பட்டன.இந்நிலையில், பொங்கல் பண்டிகையான இன்று புதுக்கோட்டையில் செங்கரும்பு கிடைக்காமல் பொதுமக்கள் ஆங்காங்கே அலைந்து திரிந்தனர்.இந்தநிலையில் புதுக்கோட்டை திலகர் திடலில் வெளி மாவட்டத்தில் இருந்து வந்த கரும்பு வியாபாரிகள் 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ 500 முதல் 800 வரை விற்பனை செய்தனர்

கரும்பு அதிக விலைக்கு விற்றாலும் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தங்களுக்கு தேவையான கரும்புகளை வாங்கிச்சென்றனர்.ஒரு சிலர் கட்டுக்கட்டாக வாங்கச் சென்றாலும் பலர் தங்களுக்கு தேவையான இரண்டு கரும்புகள் ஆகியவற்றை வாங்கிச் சென்றனர்.

Updated On: 14 Jan 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!
  2. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  5. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  6. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  7. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  8. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  9. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  10. இந்தியா
    ஸ்லோ டெத்... அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜெயிலில் இப்படி ஒரு கொடுமையா?