/* */

புத்தகத்திருவிழா:மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு திருக்குறள் நூல் பரிசு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூலை 29 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

புத்தகத்திருவிழா:மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு திருக்குறள் நூல் பரிசு
X

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா குழுசார்பில் அரசு ராணியார் மருத்துவமனையிவ் பிறந்த குழந்தைகளுக்கு திருக்குறள் நூலை பரிசளிக்கிறார், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

புத்தகத்திருவிழா நடைபெறும் நாள்களில் பிறந்த குழந்தைகளுக்கு திருக்குறள் நூல் பரிசளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூலை 29 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தும் வகையில், புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த 28 குழந்தைகளுக்கு இன்று 5.8.2022 அரசு ராணியார் மருத்துவமனையில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாக்குழு சார்பில் திருக்குறள் நூலை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பரிசளித்தார்.

இந்த நிகழ்வில் கோட்டாட்சியர் கருணாகரன், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மு. பூவதி, நிலைய மருத்துவ அலுவலர் இந்திராணி, கவிஞர் தங்கம் மூர்த்தி, மருத்துவர். வீ.சி.சுபாஷ்காந்தி, ஆராய்ச்சியாளர் ராஜ்குமார், கவிஞர் முருகேஷ், அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் வீரமுத்து, இயக்க உறுப்பினர் மணவாளன், ஜெயபாலன், பேராசிரியர் விஸ்வநாதன், ஆசிரியை கீதா, ஆசிரியை கீதாஞ்சலி மஞ்சன், புத்தக விழாக்குழு சதாசிவம் ,அறிவியல் இயக்கம் மற்றும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

Updated On: 5 Aug 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  3. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  5. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  6. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  8. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  9. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...